Saturday, 20 October 2012

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி அனுபவம்



எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். "நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்..."

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். "நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்"

அந்த உயர் அதிகாரி "அனுமதிக்க முடியாது" என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் "இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்" என்றார்.

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி "நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?"

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. "அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது..."

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.




ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப்பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

"ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?"

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். "போதவில்லை"

"திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்"

"நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது"

"எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?"

"எனக்குத் தெரியவில்லை" என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

"சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்" என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. "மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்..."

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. "இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்." அதே நேரத்தில் "இந்த உடலையா நான் "நான்" என எண்ணி இருந்தேன்?" என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. "அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது" என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். "உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!"

அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.





அந்த குரு அவரிடம் சொன்னார். "நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே"

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)

"இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன"

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

"உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்...."

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. "எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்" என்றார் அந்த குரு.

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் "பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே" என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ்நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. "மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்"

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும்.

Monday, 3 September 2012

தாண்டியா வளர்க்கும் கலாசாரம்


உணவு, மொழி, உடை, பேச்சுவழக்கு போன்ற பல்வேறு விஷயங்களில் மனிதர்கள் பிரிந்துபட்டுக் கிடந்தாலும், இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வு நம்முள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உணர்வுகளை வளர்க்க மிக உறுதுணையாய் இருப்பதில் இசைக்கும், நடனத்திற்கும் எப்போதும் மிக முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில் தாண்டியா நடனம் வட இந்தியர்களின் பாரம்பரிய நடனம் என்றாலும், அந்த நடன அமைப்பு, உடையலங்காரம், ஆடும் விதம் ஆகியவை தென் இந்தியர்களையும் கவர்ந்து உள்ளது. அதனால்தான் தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆடம்பர திருமண நிகழ்ச்சிகளில் தாண்டியாவும் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. தாண்டியா நடனம் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் ஆகும். ஆண்டுதோறும் வரும் நவராத்திரி பண்டிகையில் துர்க்கையின் புகழ்பாடி பக்தர்கள் இரண்டு கைகளிலும் குச்சிகளை வைத்துக்கொண்டு, இசைக்குத் தகுந்தவாறு ஆடுவார்கள். இப்படித்தான் தாண்டியா நடனம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. ஆனால், நாளடைவில் கலாசார மாறுதல்களுக்குத் தகுந்தவாறு இந்த நடனம் மக்கள் மகிழ்வான தருணங்களில் ஒன்று கூடும் இடங்களில் இந்த நடனம் பார்வையாளர்களின் கவனத்தை கவருவதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வருகிறது. பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வந்தாலும், அந்த நடனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருக்கத்தான் செய்கிறது.
வட குஜராத் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் இந்த தாண்டியா நடனம், தமிழகத்தின் பழங்கால கோலாட்டத்தில் இருந்து வந்ததுதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழக கேரள எல்லை வனப்பகுதியில் வசித்து வந்தவர்கள்தான் காணிக்காரர்கள் எனும் பழங்குடியின மக்கள். இன்னமும் இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. காணிக்காரர்கள் சமூகத்தில் தலைவரை மூட்டுக்காணி என்று அழைப்பார்கள். ஓணம் பண்டிகையின் போது, இவர்கள் ஊர் பொதுவிடத்தில் பிரம்மாண்டமான கோலாட்டத்தை நடத்துவார்கள். ஒவ்வொருவர் கையிலும் நீண்ட குச்சிகள் இருக்கும். கண்டிப்பாக இந்தக் குச்சிகள் அனைத்தும் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அடர்நத காட்டுப் பகுதிகளில்தான் இந்த மரங்கள் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரத்தில்இருந்து பெறப்பட்ட குச்சிகளை வைத்து தட்டும்போதுதான் ஒலி அளவு அதிகமாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம். இந்தக் குச்சிகள் மிகவும் பளபளப்பாக இருக்கும்.
காணிக்காரர்களின் கோலாட்டத்தின்போது, காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள் அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாக இருக்கும். இப்படித்தான் கோலாட்டம் தொடக்கக் காலத்தில் இருந்தது. காணிக்காரர்களின் சமூக மக்கள் அனைவரும் கூட்டமாக சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்வு பல்வேறு தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்ததால், கோலாட்டம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. காணிக்காரர்கள் மட்டுமே ஆடிவந்த கோலாட்டம் அடுத்ததாக பல்வேறு சமூக மக்களாலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பிற சமூக மக்கள் கோலாட்டத்தை புராணங்கள், இதிகாசங்களை பாடுபொருளாக வைத்து அமைத்தார்கள். தற்போது தமிழகத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளன்று சமயச் சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே நிகழ்த்தி வந்தனர். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும், உச்சத்தை நெருங்கும்போது மிக வேகமான ஆட்டமும், இசையும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் தாண்டியா என்ற பெயரில் தற்போது நிகழ்த்தப்படுகிறது.
கோலாட்டத்தில் ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. அதேபோல பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
கோலாட்டம் வந்ததற்கு புராணக்கதை ஒன்றும் கூறப்படுகிறது. தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்து ஒழிப்பது மட்டும்தான் தன் பிறப்பின் லட்சியம் என்ற உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அரக்கன். பந்தாசுரனை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கோடு களத்தில் போரிடுகிறார்கள் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதர்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாக மாறிவிடுகிறது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் களையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்ததாக கோலாட்டத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
இதே கதையின் பின்புலம்தான் தாண்டியா நடனத்திலும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தாண்டியா தமிழக கலையில் மறுபிம்பம் என்று சொல்வதை நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம். மக்களை மகிழ்விப்பதற்காகவும், உறவுகளையும், சகோதரத்துவத்தையும் ஒரு நடனம் வளர்க்கிறது என்றால், அந்த நடனத்தை நாம் கொண்டாடித்தானே ஆகவேண்டும். அந்த வகையில் தாண்டியா இந்திய கலாசார அடையாளங்களில்  என்றும் ஒரு மைல்கல்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

சங்கீத ஊர் திருவையாறு!



கட்டும் ஆடைகளும், உண்ணும் உணவும் மட்டும்தான் கலாசாரங்களா.. என்று சொன்னால், நிச்சயம் இல்லை என்ற பதில் மட்டுமே வரும். இசையும் ஒரு நாட்டின் கலாசாரமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாறு.
பாப் ரக இசை, ராக் ரக இசையைக் கேட்டவுடனேயே இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளின் இசை என்று டக்கென்று சொல்லிவிடுவோம். அப்படியானால், இசை ஒரு நாட்டின் கலாசாரம் என்பது சரிதானே. அந்த வகையில் கர்நாடக சங்கீதம் என்பது இந்திய கலாசாரத்தின் அடையாளம். இன்னும் ஆழமாக சொன்னால், கர்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்துத் தந்த தியாகராஜ சுவாமிகள்  மறைந்த திருவையாறு ஊர் கூட கலாசார சின்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு கிறிஸ்தவருக்கு ஜெருசலேம் செல்வது எப்படி வாழ்நாள் லட்சியமோ, அதேபோல ஒரு இந்துவுக்கு காசி புனித யாத்திரையும், ஒரு இஸ்லாமியருக்கு மெக்கா புனித பயணம் என்பது ஒரு வாழ்நாள் லட்சியமோ அதேபோல கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும், திருவையாறில் தியாக பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும், அவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தியாகராஜ கீர்த்தனைகள் பாடுவதுதான், கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும்.
கர்நாடக சங்கீதம் இந்து வேதங்களில் இருந்து உருவானது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக சங்கீதம் இந்தியாவில் மக்களிடையே பாடப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது அதற்கான நெறிமுறைகள், வரையறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் இருந்ததாலோ என்னவோ, அந்த சங்கீதத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் புரந்தர்தாசா  என்பவர் கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு வரையறையை அமைத்துக்கொடுத்தார். கர்நாடக சங்கீதத்திற்கான அடிப்படைகளை  புரந்தர்தாசர் வகுத்தபடியால் இவரை கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவருக்குப் பின்னர் வந்த வெங்கடேஷ்வரா என்பவர்தான் ராகங்களின் அடிப்படைகளை வகுத்துக்கொடுத்தார். புரந்தர் தாசாவின் காலம் 1564 ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில்  விஜயநகரப் பேரரசு வளர்ச்சியடைந்தகாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீதத்திற்கு தனி இலக்கணம் அமைத்துக் கொடுத்தவர்தான் தியாகராஜ சுவாமிகள்.
18ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு பக்கபலமாய் இருந்ததுகர் மைசூர் சமஸ்தானமும், திருவாங்கூர் சமஸ்தானமும்தான். 18 - 20 ஆம் நூற்றாண்டின் இடைவெளியில்தான் கர்நாடக சங்கீதத்திற்கு வாய்ப்பாட்டு மட்டும் அல்லாமல் பாட்டுடன், இசைக்கும் முக்கியத்துவம் வளர ஆரம்பித்தது. இசைக்கலைஞர்கள் பாட்டோடு வீணை, வயலின் , கடம், புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க  ஆரம்பித்தார்கள். ஆகமொத்தத்தில் இன்று நாம் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த பெருமை மைசூர் சமஸ்தானத்திற்கும், திருவாங்கூர் சமஸ்தானத்தையுமே சாரும்.
கர்நாடக சங்கீதம் என்பது கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கும் பாத்தியப்பட்டது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்,கர்நாடக சங்கீதத்தின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் ஒரே பெயர் திருவையாறு மட்டும்தான்.
1759 முதல் 1847ம் ஆண்டு வரை தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தை, “தியாகராஜ சகாப்தம்’ என்றுதான் சொல்வார்கள். திருவாரூரில் வசித்த ராமபிரும்மம் - சாந்தாதேவி தம்பதிக்கு மூன்றாவது தெய்வக் குழந்தையாக அவதரித்தார் தியாகராஜர்.  குடும்பச் சூழ்நிலையின் காரணமாக பிற்காலத்தில் இவரது  குடும் பம் திருவையாறுக்கு இடம் பெயர்ந்தது.
தியாகராஜ சுவாமிகளின் தந்தையின் ரத்தத்திலேயே ஊறிப் போன விஷயம் சங்கீதம். எனவே, இவருக்கு இசையுணர்வு இயற்கை சுபாவமாக அமைந்தது. குரல் வளமும் கை கொடுத்தது. தாயாரிடம் ராமதாசர், புரந்தரதாசர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார். திருவையாறிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். மிகுந்த புலமை பெற்றார். தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜியின் அரசவைக் கவிஞர் சொண்டி வெங்கட ரமணய்யா விடம் சங்கீதம் கற்றார் தியாகராஜர். “நமோ நமோ ராகவாய அதிசம்’ என்பது தான் அவரது முதல்பாடல். சங்கீதத்திலுள்ள தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, நாரத மந்திரத்தை உபதேசித்தார். அவர், “ஸ்வராவர்ணம்’ என்ற அரிய நூலைத் தந்து, சங்கீத ஸ்வர ரகசியங்களை அறியச் செய்தார்.
அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அதில், ஒருவர் செய்த தவறுக்காக அவரைக் கோபித்துக் கொண்டார். அப்போது அவரது மனைவி, கோபப்படுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார். அதை மையமாகக் கொண்டு எழுந்த பாடலே புகழ் பெற்ற, “சாந்தமுலேக சவுக்கியமுலேது’ என்பதாகும். ராமனைப் பற்றி மட்டுமே பாடிய அவர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, “சம்போ மஹாதேவ’ போன்ற பாடலையும் பாடினார்.
அவரது புகழ் பரவியதைப் பொறுக்காத சகோதரர் ஜப்யேசன், அவரது பாடல் தொகுப்புக்கு தீ வைத்து விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அழிந்து விட்டன. ராம விக்ரகத்தையும் திருடிச் சென்று காவிரியில் போட்டார். தியாகராஜர் துடித்தார். “அநியாய முஸேயகுரா ரானிது ராது’ என்ற பாடலை உருக்கமாகப் பாடினார். ராமன் கனவில் தோன்றி, தான் ஆற்றுமணலில் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லவே, அதை எடுத்து வந்தார். உடனே, “தொரிகிதிவோ’ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) என்ற பாடலைப் பாடினார்.  ராமனே கதியாக வாழ்ந்த அவர், பகுளபஞ்சமியன்று  காலமானார். தியாகராஜருக்கு குரு மரியாதை எப்பவுமே உண்டு. தான் வாழும்போது தன்  சீடர்களுக்கு அவர் ஒரு கட்டளையிட்டிருந்தார். தன் காலம் முடியும் தருவாயில் தன் சடலத்தை தன் குருவின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். அவர் இட்ட கட்டளையின் பெயரில் அவரின் குருவின் கல்லறைக்குப் பக்கத்திலேயே இவரது சமாதியும் அமைக்கப்பட்டது. பெங்களுரூவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர், 1925ல் தியாகராஜருக்காக  கட்டிய சமாதியில்தான், தற்போது தியாகராஜ ஆராதனை விழா நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாளில் இந்த ஆராதனை விழா நடைபெறும். இந்த விழாவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுறுகிப் பாடுவார்கள். கர்நாடக சங்கீதத்தை உயிராக நேசித்து, சங்கீதம் கற்றவர்களுக்கும், கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், இனி கற்கப்போகிறவர்களுக்கும், இந்த ஆராதனைவிழாவில் பாடுவதுதான் வாழ்நாள் லட்சியமாய் இருக்கும். அப்படிப்பட்ட இசை ஆராதனை விழாவைக் காண வெளிநாட்டுப் பயணிகள் கூட சமீப காலங்களில் வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாற்றை இந்திய அடையாளங்களில் ஒன்று சொல்வது மிகையாகாததுதானே!


கேரளத்து கதகளி!


ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அடையாளம். அந்த அடையாளம் அவனுடைய குணத்தை, பண்பை, செயலைக் காட்டும். அது, உடுத்தும் உடையாக இருக்கலாம். பேசும் பேச்சாக இருக்கலாம். உண்ணும் உணவாக இருக்கலாம். அதேபோல நாட்டின் கலாசாரம் ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தனியான அடையாளங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் இருக்கிறது. அது, உணவு, உடை, அலங்காரம், நாட்டியம் கட்டடக்கலை போன்ற பல்வேறு கூறுகளாக ஒரு மாநிலத்தின்  கலாசார அடையாளமாக தனித்து நிற்கிறது.
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தின்  பெயரைச் சொன்னவுடன், முகத்தில் கலர் கலராக வண்ணம் தீட்டி, கண்களை உருட்டி உருட்டி ஆடும், கதகளிதான் சட்டென்று கண்முன் வந்துபோகும். கதகளி என்பது கேரள மாநிலத்தின் கலாசார நடனம் என்றாலும், இந்த நடனத்தின் ஆரம்பப்புள்ளி இருந்தது கொல்கத்தாவில்தான். கதகளி நடனம் தோன்றியே கதையே கொஞ்சம் சுவராஸ்யம்தான்.
அது 17ஆம் நூற்றாண்டு. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விளங்கிய பகுதிதான் கொட்டாரக்கரா. இந்தப் பகுதியை தம்புரான் என்ற மகராஜா ஆண்டுகொண்டிருந்தார்.  தம்புரான் மகராஜாவிற்கு எப்போதும் நடனம், நாட்டியம், நாடகம் போன்றவற்றின் மீது அலாதிபிரியம். ஒரு முறை கல்கத்தாவிற்கு வணிக நோக்கில் பயணம் மேற்கொண்டிருந்தார்.  தம்புரானிற்கு புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்றால், அந்த இடத்தின் பாரம்பரியங்களை தெரிந்துகொள்வதில் முழுமையாக நேரத்தை செலவிடுவார்.
அன்  தன் அமைச்சர்கள் சகாக்களுடன்  வீதி உலா வந்துகொண்டிருந்தார். அப்போது வீதியில் கடவுள் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் கிருணன் ஆட்டம் எனும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உலா வந்த தம்புரான் நாட்டியத்துடன் கூடிய அந்த கிருஷ்ணன் கதை சொல்லும் நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப்போயிற்று. கிருஷ்ணன் ஆட்டம் முடியும் வரை பொருமையாக இருந்து வேடிக்கை பார்த்தவர், நாட்டிய அரங்கேற்றம் முடிந்த உடன் அந்த நடனக் கலைஞர்களை சந்திக்கச் சென்றார். அந்த நடனக் குழுவின் தலைவர் பெயர் சமோரின். சமோரின் கிருஷ்ணரின் தீவிர பக்கதர். கிருஷ்ணன்  மீது உள்ள காதலால், கிருஷ்ணர் பற்றி சமஸ்கிருதத்தில் பல்வேறு கதைகளை எழுதியுள்ளார். கதைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், கிருஷ்ணரின் வாழ்க்கையை நடனத்தோடு கதையை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் கிருஷ்ணன் ஆட்டம் என்ற பெயரில் உருவானது. சமோரினிடம், தம்புரான்  கிருஷ்ணன் ஆட்டம் வந்த கதைகளைப் பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்த நடனக் குழுவை அப்படியே கேரளத்திற்கு அழைத்து வர திட்டமிட்டார்.
இது சம்பந்தமாக சமோரினிடம் போய் கேட்டிருக்கிறார். ‘கேரளத்தில் இந்த நடனத்தை பிரபலப்படுத்த வேண்டும். கிருஷ்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை பட்டித்தொட்டியெல்லாம் கேரளத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் கேரளத்திற்கு வந்து , எங்கள் சமஸ்தானத்தில் தங்கியிருந்து கிருஷ்ணன் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஒரு மகாராஜா தன்னிடம் வந்து இப்படி கேட்டதற்கு சமோரினுக்கு பெருத்த மகிழ்ச்சிதான். ஆனால், அப்போது கேரளத்திற்கும், கல்கத்தாவிற்கும் இடையே உள்ள அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால், சமோரின் நடனக் குழுவை தம்புரானால் உடனடியாக கேரளத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கேரளத்திற்கு வந்த பிறகும் தம்புரானால், மனம் கிருஷ்ணன் ஆட்டத்தை விட்டு வெளிவரவில்லை. எப்படியாவாது அதேபோன்றதொரு ஒரு நாட்டிய நாடகத்தை கேரளத்திலும் உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சில நாட்டியக் கலைஞர்களை வைத்து ராமன் ஆட்டம் எனும் புது வகை நாட்டியத்தை உருவாக்கினார். கிருஷ்ணன் ஆட்டம் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஆனால், ராமன் ஆட்டத்தின் முழு கதையும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது. முதல் பகுதி முழுவதையும் தம்புரானே எழுதினார். ராமன் ஆட்டம் உருவாக்கியதில் தம்புரானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  ராமன் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்தது. ராமன் ஆட்டத்திற்கு பல்வேறு எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பித்தார்கள்.  ராமன் ஆட்டம் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கிய பெருமை எழுத்தாளர் இறையம்மன் தம்பியையே சாரும். காலங்கள் ஓட ஆரம்பித்தன . ராமன் ஆட்டம் எனும் நாட்டிய நாடகம் ஆட்டகதா என்ற பெயரில் (ஆட்டத்துடன் கதை கூறுவது என்று பொருள்) அந்த நாட்டியம் மெருகேற தோன்றியது. இந்த நடனத்தை மேலும் மெருகேற்றவும் நாட்டிய நாடகத்தை ஊரெங்கும் பரப்ப பெரிதும் பாடுபட்ட பெருமை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மகராஜாவா ஸ்வாதி திருநாள் ராம வர்மாவையே சேரும்.
தம்புரான் உருவாக்கிய ராமன் ஆட்டம், ஆட்டகதா நாட்டிய நாடகம்தான் கதகளியாக மாறியது.  17 ஆம் நூற்றாண்டு நாட்டிய நாடகமான இன்றிருக்கும் கதகளியில் கடவுள்தான் கதாநாயகர்கள்.  நடிப்பு, நடனம், அபிநயம், இசை, வாத்தியம் வாசித்தல் எனும் ஐந்துக் கலைகளை உள்ளடக்கியதுதான் கதகளி. இந்த ஐந்து கலைகளையும் தெரிந்த ஒருவரால் மட்டும்தான் கதகளியை திறம்பட ஆட முடியும் என்பது கதகளியின் கூடுதல் சிறப்பு. கதகளியில் கிட்டத்தட்ட 101 கதைகள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக பெரும்பாலான மேடைகளில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள் மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. ஊடகங்கள் பெருகாத அந்தக் காலக்கட்டத்தில், கேரளத்தில் கதகளி விடிய விடிய மக்கள் பார்த்து ரசிப்பார்களாம். ஆனால், தற்போது ஊடகங்கள் பெருகி இருந்தாலும், கதகளியின் ரசிப்புத் தன்மை மட்டும் இன்னும் கேரளத்து மக்களிடையே குறையவில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், கதகளி அரங்கேற்றம் மட்டும் இரவில் இரண்டில் இருந்து நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது.
கதகளி நாட்டிய நாடகம் பற்றிய ஆராய்ச்சி கேரளத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கதகளியில் கதாபாத்திரங்கள் அணிந்துவரும் நகைகள், புறத்தோற்றம், முகபாவங்களை வெளிக்காட்டுதல், நடன அசைவுகள் இவைகள் எல்லாம் தம்புரான் மகாராஜா 15 ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் உள்ள மட்டஞ்சேரி பகுதி கோயிலில் உள்ள சிற்பங்களின் அடிப்படையாக வைத்து நடனத்தை அமைத்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் புராணக்கதைகளை  நாட்டியம், நடனம், இசை, அலங்காரத்துடன் அட்டகாசமாக பட்டிதொட்டியெல்லாம் பரப்பியதோடு, தங்கள் மொழியின் உச்சரிப்பையும், தங்கள் மாநில கலாசாரத்தை மக்கள் மத்தியில் பரப்பிய கதகளி, இன்னும் பல நூற்றாண்டுகள் கேரத்தின் பெருமையை பறைசாற்றும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

போர்க்களத்தில் பிறந்த வில்லுப்பாட்டு!


ஒவ்வொரு மாநிலத்தையும்.. ஏன் ஒவ்வொரு நாட்டையும் தனியாக அடையாளப்படுத்த இசை, நடனம், ஓவியம், பேச்சு, உடை, கட்டடம் என்று ஒவ்வொன்றும் கருவியாய் இருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகள் தவிர்த்து, கிழக்கு கேரளம் வரை மக்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயம்தான் வில்லுப்பாட்டு.
வில்லுப்பாட்டு என்பது இசையோடு புராணங்கள், பக்தியை சொல்லும் இசை நிகழ்ச்சி என்றுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால், வரலாற்றில் வில்லுப்பாட்டுக்கு தனியொரு இடம் உண்டு. இந்தத் தலைமுறையினர் வரை ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் வில்லுப்பாட்டு, நாகரிக வளர்ச்சி, ஊடகங்கள் பெருக்கங்களினால் அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள முடியாத அழிவுறும் விளிம்பு நிலைக்கு  வில்லுப்பாட்டு என்ற ஒரு கலை தள்ளப்பட்டுவிடுமோ அச்சம் நம்மிடம் தொற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.
தென் தமிழக மாவட்டங்களில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவது எல்லோரும் அறிந்ததே. பெரும்பாலும் ஏப்ரல் மே மாதங்களில்தான் சிறு தெய்வங்களை வழிபடும் திருவிழாக்கள் அதிக அளவில் தென் மாவட்டங்களில் ஊருக்கு ஊர் நடைபெறும். இந்த திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு சிறுதெய்வ கோயில்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு என்று தனியொரு இடம் உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் சிறு தெய்வங்களுக்கு பூஜைகள் இரவு 7 மணியில் ஆரம்பித்து 8 மணிக்கு முடிந்துவிடும். அதையடுத்து நடு இரவு ஒரு மணிக்கு சாமி காடு செல்லும் சடங்கு நடைபெறும். அதையொட்டி நடுநிசி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையை பார்க்க பக்தர்கள் விழித்து இருப்பதற்காக, சிறு தெய்வ சிலைக்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் சிறு தெய்வகளின் புராணக் கதைகளை கூறுவார்கள். தமிழர்களின் பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறை எல்லாமே இந்தக் கதையோடு ஒட்டி நகைச்சுவை கலந்து மெட்டு இசைத்துப் பாடுவார்கள் வில்லுப்பாட்டு கலைஞர்கள்.
இன்று கோயில்களிலும் திருவிழாக்களிலும் காணும் வில்லுப்பாட்டு வந்த கதை கொஞ்சம் சுவராஸ்யமானது. கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டு காலம் அது. மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்ட காலம். விலங்குகளை வேட்டையாட அந்தக் காலக்கட்டத்தில் மனிதன் வில் போன்ற ஆயுதத்தையே பயன்படுத்தினான். தான் தேடிச்சென்ற விலங்கு கிடைக்காதபோதும், வேட்டை சரியாக அமையாதபோதும், தங்கள்  சோர்வு தெரியாமல் இருக்க, வில்லை கவிழ்த்தி, காய்ந்த சருகுகளை ஓட்டையிட்டு அதை வில்லின் நாணில் கோர்த்து, கைகளை நாணில் தட்டி இசைப்பார்களாம். வில்லுப்பாட்டு முதன் முதலில் அரங்கேறியது நடுக்காட்டில் விலங்குகளை வேட்டையாடியபோதுதான்.
காலங்கள் உருண்டோடியது. விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த வில், போர் ஆயுதமாக உருவெடுத்தது. போர் வீரர்கள் போர்க்களத்தில் சோர்ந்து போய் நின்றுகொண்டிருக்கும்போது, ஏதேனும் ஓர் போர் வீரன் வில்லை தலைகீழாய் கவிழ்த்தி அதில் மணிகளை கோர்த்து, போர் வீரர்களின் சோர்வை நீக்கவும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் வகையிலும், தங்கள் சாகசங்களையும், தங்கள் மூதாதையர்களின் போர்த்திறமைகளையும், போரில் வெற்றிபெற்ற கதைகளையும் உரக்க  சப்தமிட்டு பாடுவார்களாம். இந்த வீர எழுச்சிப் பாட்டைக் கேட்டும் ஒவ்வொரு வீரருக்கும் வீரம் கொப்பளிக்குமாம். சோர்வை விரட்டி, போரில் சண்டையிடுவார்கள் என்கிறது வரலாற்று ஆய்வேடு.  எந்த இலக்கணத்திற்கும் உட்படாமல், குரலும், மனமும் போன போக்கில் உக்கிரமான மகிழ்ச்சியை அள்ளித்தரும் விஷயமாகத்தான் வில்லுப்பாட்டின் முதற்படி அமைந்தது.
15 ஆம் நூற்றாண்டின் காலத்தில் அரசர்களின் புகழ் பாட அரசவையில் அருதக்குட்டி எனும் புலவரால் வில்லுப்பாட்டுக்கு இலக்கணம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், புலவரின் பெயர் குறித்த சர்ச்சையும் வரலாற்று ஆய்வாளர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்த வரலாற்று ஆய்வாளர்களும், 15 ஆம் நூற்றாண்டில் வில்லுப்பாட்டக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டதை யாரும் மறுக்கவில்லை. வில்லுப்பாட்டு ஒரு வடிவத்திற்கு வர ஆரம்பித்தது. கி.பி. 1550 ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில்தான்.
 வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வில்லுப்பாட்டின் முக்கிய அங்கமாக விழங்கும் வில்லானது ஆரம்ப காலக்கட்டத்தில் முற்றிலும் பனை மரத்தாலேயே செய்யப்பட்டது. வேறு வேறு மரங்களில்  வில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பனை மரத்தில் செய்யப்பட்ட வில்லில் இருந்து கிடைக்கும் இசையின் நயம், மற்ற மரங்களில் அமைக்கப்பட்ட வில்லில் கிடைக்கவில்லையாம்.  நடுவில் தடிமனாகவும், இரண்டு ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் இந்த வில்லின் ஓரங்களில் நாண் ஏற்றப்பட்டு, மணிகள் தொங்கவிடப்பட்டு இசைக்கப்படுகிறது. இந்த வில்லுடன், கடம், ஜால்ரா போன்றவை பக்க வாத்தியமாக இருந்தாலும், பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிலுக்கு கொண்டு சென்று மேடையை தெய்வீகமயமாக்கியது உடுக்கை என்ற இசைக்கருவிதான். ஆனால், தற்போது அரங்கேற்றப்படும் வில்லுப்பாட்டில் உடுக்கை பயன்படுத்துவது இல்லை மாறாக தபேலா, ஆர்மோனியம், பம்பை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வில்லுப்பாட்டில் ஆறு இசைக்கலைஞர்கள் இருப்பார்கள். இதில் ஒருவர் நகைச்சுவை கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்? ஒருவர் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சிலேடை கேள்விகளை கேட்பார். மற்றவர்கள் இசைக்கருவிகளை இசைக்க ஒருவர் முக்கியக் கதையை பாட்டோடு இசைத்து பாடுவார். மன்னர்களின் வரலாறு, புராணக்கதைகள், சிறு தெய்வ வரலாறு என்பது மட்டுமே முன்னர் வில்லுப்பாட்டுக்கு பாடு பொருளாக இருந்தது. ஆனால், தற்போது காலத்திற்கு தகுந்தவாறு வில்லுப்பாட்டில் அறிவியல் விஷயங்களும் பாடுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரையறுக்கப்பட்ட மெட்டுக்கள் கிடையாது; குரலில் இனிமை வேண்டும் என்ற கட்டுப்பாட்டும் கிடையாது; இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இப்படி இசைக்கே உண்டான அத்தனை முக்கிய அம்சங்களையும் புரந்தள்ளிவிட்டு, பார்ப்பவர்களின் எண்ணங்களை தூண்டி, கலாசாரத்தை வளர்க்க உதவியாய் அமைந்ததுதான் வில்லுப்பாட்டு. இன்றளவேணும் தென் மாவட்ட மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துகிடக்கும், வாழ்வியலையும், பண்பாட்டையும் இசையோடு பேசு மொழியில் மனதில் பதியவைத்த இந்த வில்லுப்பாட்டு தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றுதானே!

Friday, 31 August 2012

அணுவுலை அரசு பயங்கரவாதம்..!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுவடைந்து வருவது எதை காட்டுகிறது?

    லகிலேயே மனித உயிர்களை மிக மலிவான பொருளாக கருதுவது ஒருவேளை இந்தியாவில் மட்டும் தானோ? என்ற எண்ணம் நமக்கு அடிக்கடி வந்துவிடுகிறது. ஒருபகுதி மக்கள் தங்களது வாழ்வின் ஆதரங்களுக்காகவும் வாழ்வுக்காகவும் தொடர்ந்து போராடுகிறார்கள் தங்களது எதிர்ப்பை காட்ட நியாயமான வழிமுறைகள் எவைகளெல்லாம் உண்டோ அவைகளை நாடுகிறார்கள் ஆனால் அவர்கள் தட்டுகின்ற கதவுகள் எதுவும் அவர்களுக்காக திறக்கப்பட வில்லை மாறாக அவர்கள் முகத்தில் இரக்கமே இல்லாமல் அடிதான் விழுகிறது.

அரசாங்க நிர்வாகத்தின் அனைத்து இயந்திரங்களும் அந்த மக்களின் உண்மையான பிரச்சனையை மனசாட்சியோடு பார்க்க மறுக்கிறது. கண்முன்னால் தெரிவது பேரழிவு மட்டுமே என்றாலும் அதை நான் பார்க்க மாட்டேன் அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்ற வகையில் தான் நிர்வாகங்கள் நடந்து வருகிறது. தங்களை பற்றி சிறிது கூட கவலைபடாத அரசு இயந்திரத்தை நோக்கி மக்கள் போராடத்தான் முடியும்.


ணுமின் நிலையத்தால் மின்சாரம் கிடைக்கிறது அது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்? வேண்டாம் என்று மறுக்க வேண்டும்?

     மின்சாரத்தால் நாட்டுக்கு நல்ல வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான் இன்றைய நிலையில் மின்சாரம் என்பது இல்லா விட்டால் சுவாசிக்க காற்று இல்லாமல் உயிர்கள் எப்படி மறித்து போகுமோ அதை போலவே மின்சாரம் இல்லாமல் வளர்ச்சியும் நின்று போகும் ஆனால் அந்த மின்சாரத்தை பெறுவதற்கு அணுவுலை மட்டும் தான் ஒரே வழி என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

சர்வதேச அளவில் எந்த நாட்டிலும் முழுமையான மின்சார தேவையை அணுவுலைகள் பூர்த்தி செய்ய வில்லை செய்யவும் முடியாது. கூடங்குளம் அணுவுலையில் இருந்து பெறப்போவதாக சொல்லப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்த பட்சம் தமிழ்நாட்டு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யாது.

அணு மின்சாரத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை விட அழிவுகளே அதிகம் என சொல்லலாம். மனித தவறாலோ இயந்திர கோளாறாலோ இயற்க்கை சீற்றத்தாலோ ஒரு சிறிய விபத்து ஏற்பட்டால் கூட அதன் விளைவுகள். மிக மோசமானதாக இருக்கும். அணுகுண்டுகள் வினாடி நேரத்தில் பல உயிர்களை காவுகொள்ளும் என்றால் அணுவுலை நின்று நிதானமாக பல உயிர்களை பறித்து விடும். பலரை நிவாரணம் செய்ய முடியாத அளவிற்கு பாதிப்படைய செய்து விடும். அதனால் மட்டுமே அணுமின்சாரம் வேண்டாம் என்று இயற்க்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

விபத்து ஆபத்து எல்லா துறையிலுமே இருக்கிறது. சாதாரணாக சைக்கிளில் சென்றால் கூட ஆபத்து இருக்கிறது. ஆபத்தை மட்டுமே பார்த்தால் வளர்ச்சியை எப்படி அடைய இயலும்.

ஒரு ரயில் விபத்திற்கும் அணுவுலை விபத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அணுவுலையில் விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சி சம்மந்தப்பட்ட நிலபகுதியோடு நின்றுவிடாது கதிர்கள் காற்றின் மூலமாக பயணப்பட்டு பல பகுதிகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிடும். அந்த பகுதியில் பல நூற்றாண்டுகள் எந்த உயிர்களும் வாழ முடியாத நிலை உருவாகி விடும்.


ப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் இந்த அணுவுலையால் எந்த அபாயமும் ஏற்படாது என்று சொல்கிறார்களே பிறகு எதற்க்காக பயப்பட வேண்டும்?

       ரு சினிமாகாரனிடம் போய் திரைப்படங்கள் எடுக்கபடுவது நிறுத்தப்பட்டு விட்டால் என்ன நிகழும் என்று கேட்டால் உலகமே அழிந்து விடும் என்று பதில் சொல்வான் காரணம் அவனுக்கு சினிமா மட்டுமே தெரியும் அவற்றால் ஏற்படும் சமூக விளைவுகளை பற்றி அதிகம் தெரியாது. அப்துல்கலாம் அவர்களின் கூற்றை இந்த வகையில் நம்மால் எடுத்துகொள்ள இயலாது காரணம் அவருக்கு அணுகசிவால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்குமென்று நம்மைவிட அதிகமாக தெரியும். ஆனாலும் அவர் ஒரு சாதாரண சினிமாக்காரனை போல் மக்களை மயக்குவதற்காக பேசுகிறார். இது நமது நாட்டின் மிகபெரிய துரதிஷ்டம்.


ப்படியென்றால் அணுவுலை எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் மக்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறாகள் மற்றவர்கள் அனைவரும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

     ப்படி நான் கூற வேண்டாம் என்று தான் விரும்புகிறேன். ஆனால் இந்த விஷயத்தின் நடைமுறையை பார்க்கும் போது அப்படி கூறவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று அச்சபடுகிறேன். காரணம் காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொண்டுவந்த திட்டம் அதை மாற்ற கூடாது என்று நினைக்கிறார்கள் பாஜக இந்த போராட்டத்தில் கிருஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அதில் நாம் நியாயத்தை பேச வேண்டாம். என்று கருதுகிறார்கள் திமுக அதிமுக போன்ற மாநில கட்சிகளுக்கு அணுவுலையால் ஏற்படும் மக்கள் பாதிப்பை விட டெல்லி அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வதே மிக சிறந்தது என்று தோன்றுகிறது. அதனாலேயே அவர்கள் நடக்கும் காரியம் அநியாயம் என்பதை நன்றாக தெரிந்திருந்தும் சுயநலத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமிழக அரசாங்கம் இந்த விஷயத்தை மிக கவனமாக பரிசிலித்து செயல்பட வேண்டும் காரணம் அணுவுலை எதிர்பாளர்களுக்கு பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லை என்றவுடன் பல சிறிய தமிழ் தேசிய பிரிவினை வாத அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன. போராட்ட களத்தில் மிக முக்கிய பங்கு பணியாற்றும் மீனவ மக்களை இந்த அமைப்புகள் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்த துவங்கினால் வருங்காலத்தில் தென்தமிழகத்தில் மிகபெரிய வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனவே வரக்கூடியதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.



ப்படி என்றால் கூடங்குளத்தில் அணுவுலை வேண்டாம் என்கிறீர்களா?

  கூடங்குளத்தில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலுமே அணுவுலை என்பது தேவையில்லை பயங்கரவாதத்தை எப்படி மனித சமூகம் வெறுத்து ஒதுக்குகிறதோ? அதே போலவே அணுவுலைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

அணுவுலை என்பது உலகிற்கு மிகபெரிய அச்சுறுத்தல்.!

Sunday, 26 August 2012

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை


கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000

 
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன்,  நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

 

கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.
      
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.   பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது)   சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
கி.பி. 1 - 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.