Friday, 31 August 2012

அணுவுலை அரசு பயங்கரவாதம்..!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுவடைந்து வருவது எதை காட்டுகிறது?

    லகிலேயே மனித உயிர்களை மிக மலிவான பொருளாக கருதுவது ஒருவேளை இந்தியாவில் மட்டும் தானோ? என்ற எண்ணம் நமக்கு அடிக்கடி வந்துவிடுகிறது. ஒருபகுதி மக்கள் தங்களது வாழ்வின் ஆதரங்களுக்காகவும் வாழ்வுக்காகவும் தொடர்ந்து போராடுகிறார்கள் தங்களது எதிர்ப்பை காட்ட நியாயமான வழிமுறைகள் எவைகளெல்லாம் உண்டோ அவைகளை நாடுகிறார்கள் ஆனால் அவர்கள் தட்டுகின்ற கதவுகள் எதுவும் அவர்களுக்காக திறக்கப்பட வில்லை மாறாக அவர்கள் முகத்தில் இரக்கமே இல்லாமல் அடிதான் விழுகிறது.

அரசாங்க நிர்வாகத்தின் அனைத்து இயந்திரங்களும் அந்த மக்களின் உண்மையான பிரச்சனையை மனசாட்சியோடு பார்க்க மறுக்கிறது. கண்முன்னால் தெரிவது பேரழிவு மட்டுமே என்றாலும் அதை நான் பார்க்க மாட்டேன் அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்ற வகையில் தான் நிர்வாகங்கள் நடந்து வருகிறது. தங்களை பற்றி சிறிது கூட கவலைபடாத அரசு இயந்திரத்தை நோக்கி மக்கள் போராடத்தான் முடியும்.


ணுமின் நிலையத்தால் மின்சாரம் கிடைக்கிறது அது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்? வேண்டாம் என்று மறுக்க வேண்டும்?

     மின்சாரத்தால் நாட்டுக்கு நல்ல வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான் இன்றைய நிலையில் மின்சாரம் என்பது இல்லா விட்டால் சுவாசிக்க காற்று இல்லாமல் உயிர்கள் எப்படி மறித்து போகுமோ அதை போலவே மின்சாரம் இல்லாமல் வளர்ச்சியும் நின்று போகும் ஆனால் அந்த மின்சாரத்தை பெறுவதற்கு அணுவுலை மட்டும் தான் ஒரே வழி என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

சர்வதேச அளவில் எந்த நாட்டிலும் முழுமையான மின்சார தேவையை அணுவுலைகள் பூர்த்தி செய்ய வில்லை செய்யவும் முடியாது. கூடங்குளம் அணுவுலையில் இருந்து பெறப்போவதாக சொல்லப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்த பட்சம் தமிழ்நாட்டு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யாது.

அணு மின்சாரத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை விட அழிவுகளே அதிகம் என சொல்லலாம். மனித தவறாலோ இயந்திர கோளாறாலோ இயற்க்கை சீற்றத்தாலோ ஒரு சிறிய விபத்து ஏற்பட்டால் கூட அதன் விளைவுகள். மிக மோசமானதாக இருக்கும். அணுகுண்டுகள் வினாடி நேரத்தில் பல உயிர்களை காவுகொள்ளும் என்றால் அணுவுலை நின்று நிதானமாக பல உயிர்களை பறித்து விடும். பலரை நிவாரணம் செய்ய முடியாத அளவிற்கு பாதிப்படைய செய்து விடும். அதனால் மட்டுமே அணுமின்சாரம் வேண்டாம் என்று இயற்க்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

விபத்து ஆபத்து எல்லா துறையிலுமே இருக்கிறது. சாதாரணாக சைக்கிளில் சென்றால் கூட ஆபத்து இருக்கிறது. ஆபத்தை மட்டுமே பார்த்தால் வளர்ச்சியை எப்படி அடைய இயலும்.

ஒரு ரயில் விபத்திற்கும் அணுவுலை விபத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அணுவுலையில் விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சி சம்மந்தப்பட்ட நிலபகுதியோடு நின்றுவிடாது கதிர்கள் காற்றின் மூலமாக பயணப்பட்டு பல பகுதிகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிடும். அந்த பகுதியில் பல நூற்றாண்டுகள் எந்த உயிர்களும் வாழ முடியாத நிலை உருவாகி விடும்.


ப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் இந்த அணுவுலையால் எந்த அபாயமும் ஏற்படாது என்று சொல்கிறார்களே பிறகு எதற்க்காக பயப்பட வேண்டும்?

       ரு சினிமாகாரனிடம் போய் திரைப்படங்கள் எடுக்கபடுவது நிறுத்தப்பட்டு விட்டால் என்ன நிகழும் என்று கேட்டால் உலகமே அழிந்து விடும் என்று பதில் சொல்வான் காரணம் அவனுக்கு சினிமா மட்டுமே தெரியும் அவற்றால் ஏற்படும் சமூக விளைவுகளை பற்றி அதிகம் தெரியாது. அப்துல்கலாம் அவர்களின் கூற்றை இந்த வகையில் நம்மால் எடுத்துகொள்ள இயலாது காரணம் அவருக்கு அணுகசிவால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்குமென்று நம்மைவிட அதிகமாக தெரியும். ஆனாலும் அவர் ஒரு சாதாரண சினிமாக்காரனை போல் மக்களை மயக்குவதற்காக பேசுகிறார். இது நமது நாட்டின் மிகபெரிய துரதிஷ்டம்.


ப்படியென்றால் அணுவுலை எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் மக்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறாகள் மற்றவர்கள் அனைவரும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

     ப்படி நான் கூற வேண்டாம் என்று தான் விரும்புகிறேன். ஆனால் இந்த விஷயத்தின் நடைமுறையை பார்க்கும் போது அப்படி கூறவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று அச்சபடுகிறேன். காரணம் காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொண்டுவந்த திட்டம் அதை மாற்ற கூடாது என்று நினைக்கிறார்கள் பாஜக இந்த போராட்டத்தில் கிருஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அதில் நாம் நியாயத்தை பேச வேண்டாம். என்று கருதுகிறார்கள் திமுக அதிமுக போன்ற மாநில கட்சிகளுக்கு அணுவுலையால் ஏற்படும் மக்கள் பாதிப்பை விட டெல்லி அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வதே மிக சிறந்தது என்று தோன்றுகிறது. அதனாலேயே அவர்கள் நடக்கும் காரியம் அநியாயம் என்பதை நன்றாக தெரிந்திருந்தும் சுயநலத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமிழக அரசாங்கம் இந்த விஷயத்தை மிக கவனமாக பரிசிலித்து செயல்பட வேண்டும் காரணம் அணுவுலை எதிர்பாளர்களுக்கு பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லை என்றவுடன் பல சிறிய தமிழ் தேசிய பிரிவினை வாத அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன. போராட்ட களத்தில் மிக முக்கிய பங்கு பணியாற்றும் மீனவ மக்களை இந்த அமைப்புகள் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்த துவங்கினால் வருங்காலத்தில் தென்தமிழகத்தில் மிகபெரிய வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனவே வரக்கூடியதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.



ப்படி என்றால் கூடங்குளத்தில் அணுவுலை வேண்டாம் என்கிறீர்களா?

  கூடங்குளத்தில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலுமே அணுவுலை என்பது தேவையில்லை பயங்கரவாதத்தை எப்படி மனித சமூகம் வெறுத்து ஒதுக்குகிறதோ? அதே போலவே அணுவுலைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

அணுவுலை என்பது உலகிற்கு மிகபெரிய அச்சுறுத்தல்.!

Sunday, 26 August 2012

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை


கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000

 
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன்,  நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

 

கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.
      
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.   பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது)   சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
கி.பி. 1 - 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

மாயன் காலண்டர்






2012 உலக அழிவு என்றதுமே...

அனைவரும் "மாயன்" களின் நாற்காட்டியைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறார்கள்.
மாயன்கள் என அழைக்கப்படும் சாம்ராஜ்ஜம்.
எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.


அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டியை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது.
சரி... இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்.மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.)
அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க.
ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்.அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.


முதலாவதாக... மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்... இருக்கிறது.
எகிப்திய பிரமிட்களின் சுவர்களில் உள்ள சித்திர எழுத்துக்கள் பல எதிர்கால உலக நிகழ்வுகளைப்பற்றியவையாம்.



எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்... பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள்.
அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம்.


அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.
யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்... என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.


அடுத்து... நொஸ்ராடாமஸ் ( தீர்க்கதரிசி ) சொன்னதை பார்த்தால்...
அவரின் கணிப்பின் படி... ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம்... ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம்.
மேலும் அவரது கணிப்புக்களின் படி 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துப்படி...
"3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும்... இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்... 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்."
இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது.

அடுத்து... புவியியலாலர்களின் கருத்துப்படி
பூமியில் 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறியலவிலான பனியுகம்
( உறைபனிக்காலம்) ஏற்படுமாம்.
இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம்.
அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.
அது 2012 இல் தான் ஏற்படுமென... ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள்.
அடுத்து... சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள்.
பொதுவாக மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்... என்றும் கருதுகின்றார்கள்.


சமீபத்தில்... பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்... புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல்... போன்றன... ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது. 

மாயன்கள் வரலாறு பற்றி சில தகவல்கள்

மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும்.



கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.

கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்க்கு முன்பாகவோ காலண்டர்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.

கி.பி. 1511 கோன்சலோ குரேரோ என்ற ஸ்பெயின் நாட்டுகாரரின் கப்பல் புயலில் சிக்கி மாயன் பகுதியில் கரை தட்டியது. அவர் அங்கு வாழும் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1517 ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மேல் போர் தொடுத்தது. 90 சதவீத மாயன் மக்கள் கொல்லபட்டார்கள். அத்தோடு மாயன் மக்கள் கலாச்சாரம் மறைந்தது.



இவர்கள் சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தினார்கள். கோகோ இவர்களின் முக்கிய பானமாக இருந்திருக்கிறது. மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது..




வாழ்ந்த பிரதேசம்

இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் .

நாகரிகத்தின் மைல்கற்கள்

    கி.மு 2600 : மாயன் நாகரிகத்தின் ஆரம்பம் மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர் .
    கி.மு 700 : Hieroglyph எனும் சித்திர எழுத்து முறையினை மாயன்கள் ஆரம்பித்தனர் .இச் சித்திர எழுத்து முறையானது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறையாக இருந்தது .
    கி.மு 400 : இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    கி.மு 300 : மன்னர்கள் ,பிரபுக்கள் ,பூசாரிகள் என ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புக்கள்,அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன .
    கி.மு 100 : Teotihuacan என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது .இந்த நகரம் இன்றும் இருக்கிறது .கலை,மதம் வர்த்தகம் என்பன இங்கு காணப்பட்டன.
    கி.மு 50 : Cerrors என்ற நகரம் உருவாகியது. இது கோயில்கள் ,மண்டபங்கள் நிறைந்த நகரமாகும்.
    கி.பி 100 : பல உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பமாகின .மாயன் நாகரிகம் முதன்முதலாக சரிவுப் பாதையில் காலெடுத்து வைத்தது .
    கி.பி 900 : மேற்குப் பகுதியில் நகரங்கள் ஒவ்வொன்றாக மறைந்தன.மாயன் நாகரிகம் வீழ்ச்சியின் ஆரம்பம் .
    கி.பி 1511 : கோன்ஷலோ குரேரோ (Gonzalo Gurrero) என்ற ஸ்பானியர் புயலில் சிக்கி மாயன் பகுதியில் இறங்கினார்.
    கி.மு 1517 : ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மீது போர்தொடுத்து 90 % மாயன் மக்களைக் கொன்றொழித்தது .அதனால் மக்கள் மாத்திரமின்றி,அவர்களின் கலாச்சாரமும் மறைந்தது.

உணவும் உடையும்

மாயன் மக்களின் பிரதான உணவாக சோளமும் பிரதான பானமாக கொக்கோவும் இருந்தது .உணவில் உப்பும் முக்கியமாக சேர்க்கப்பட்டது .காய்கறி ,இறைச்சி போன்றவற்றை உப்பில் இட்டுப் பதப்படுத்தினார்கள் .பருத்தி ,கம்பளி ,சணல்,கற்றாழை நார் போன்றவற்றால் நெய்யப்பட்ட உடைகளை அணிந்தனர்.

மத வழிபாடுகள்

மத நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் மாயன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகித்தன .மழை,காற்று,பிறப்பு ,இறப்பு ஆகாயம் ,கல்வி ,சூரியன் ,சந்திரன் ,அன்பு ,வியாபாரம் ,பாதாள உலகம் என 166 கடவுள்கள் இருந்தன .மிகப்பிரமாண்டமான கோயில்களை கட்டி அடிக்கடி திருவிழாக்களை நடத்தினர் .விலங்குகள் ,கைதிகள்,அடிமைகள் ,குழந்தைகள் என பலிகள் சாதாரணமாக நடந்தன.

கலைத்துறை

மன்னர்களின் அரண்மனைகள் ,கோயில்கள் ,எகிப்திய பிரமிட் போன்ற கட்டடங்கள் கலை நயத்தோடு நிர்மாணிக்கப்பட்டன .மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டன .மனித சக்தியே கட்டிடங்களை உருவாக்கப் பயன்பட்டது .கருங்கல் ,நீர் கலந்த சுண்ணாம்பு ஆகியவையே கட்டட மூலப்பொருட்களாக விளங்கின .மாயன்கள் அற்புதம் நிறைந்த சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் உருவாக்கினார்கள் . விதவிதமான மட்பாண்டங்கள் செய்தார்கள். பீங்கான் ,பாத்திரங்கள் ,மரப்பட்டைகள் என்பனவற்றில் கடவுள்கள் ,இயற்கைக்காட்சிகள் ,மிருகங்கள் ,பறவைகள் ,என ஓவியங்களை தீட்டினார்கள் .தங்கத்தில் ஆலய மணிகளையும் கடவுள்களின் வடிவத்தில் முகமூடிகளையும் செய்தார்கள் .மாயன் மக்களின் எழுத்து சித்திர எழுத்தாகும்.இவற்றில் முந்நூறு குறியேடுகள் இருந்ததன .கல்வெட்டுக்கள்,மான்தோல் மற்றும் மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றில் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி,தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் .

வானியல் அறிவு

இம்மக்களின் வானியல் தொடர்பான அறிவு வியக்கத்தக்கது .சூரிய ,சந்திர இயக்கங்களைப் பதவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுகூடங்களை அமைத்திருந்தனர்.இவற்றில் தொலைநோக்குகள் போன்ற கருவிகளும் இருந்தன .1945க்குப் பின்னர்தான் விஞ்ஞானிகளால் "பால் வீதி "(Milkway )பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.ஆனால்,அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாயன் மக்கள் பால்வீதி பற்றி அறிந்திருந்தார்கள்.

நாட்காட்டிகள்

பல்வேறு நாட்காட்டிகள் பாவனையில் இருந்தன. அதில் ஒரு நாட்காட்டியானது,365 நாட்களைக் கொண்டது. ஆண்டுகளுக்கு 18 மாதங்கள் .ஒவ்வொரு மாதமும் 20 நாட்களை கொண்டிருந்தது.இதனை "ஹாப்" (Haab ) என அழைத்தனர் .இதன்படி,வருடத்தில் 360 நாட்கள் சாதாரண எஞ்சிய 5 நாட்களை அதிஷ்டம் இல்லாத நாட்கள் என்றும் கருதினர் .கி.மு 550 இல் இந்த நாட்காட்டி முறை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது .மற்றொரு வகை நாட்காட்டியில் மொத்தம் 260 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 மாதங்களைக் கொண்டது .மாதமொன்றில் 20 நாட்கள். இதற்கு "ஸோல்கின் "(Tsolkin ) என்று பெயர். இது "புனித நாட்காட்டி "என்று அழைக்கப்பட்டது .மாதமொன்றின் 20 நாட்களுக்கும் 20 கடவுள்களின் பெயரை வைத்திருந்தனர்.

நாகரிகத்தின் வீழ்ச்சி

இரு பிரதான காரணங்கள் மாயன் நாகரிகத்தின் மறைவுக்கு வித்திட்டன .மாயன் மக்கள் தமது இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை .காடுகள் நிறைந்த தமது பகுதிகளில் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள் இதனால் மலை குறைந்து வறட்சி ,பஞ்சம் ,பட்டினி ,நோய்கள் என்பன பெருகின .மாயன் சமுதாயம் இவற்றுக்குப் பலியாகின .

அடுத்த காரணம் .15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின .

மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மாயன் நம்பிக்கைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்/நூல்கள்

ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

வீழ்ச்சி

இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.

Wednesday, 4 July 2012

அழியுமா உலகம்?

திடீரென ஒரு பரபரப்பு உலகின் பார்வையை இருள்மண்டிக்கிடந்த அமெரிக்கக்காடுகளுக்கு திருப்பியது. ஆனால் அந்தப்பார்வையில் ஆழ்ந்து தேடும் தேடலுக்கான அறிகுறியைவிட அஞ்சும் மரணபயமே தென்படுகிறது. ஆம்….அழியுமா உலகம்? இந்தக்கேள்வி தோன்றிய இடத்திலிருந்தே விடையை தேட ஆரம்பித்துள்ளனர்…..
ஸ்பெயின் சிப்பாய்களின் படையெடுப்பால் சின்னாபின்னமாகிப்போன மாயன்களின் மாயதேசத்திலிருந்து உலகிற்கு ஒரு புதியசெய்தி கிடைத்தது அந்த செய்தியை தாங்கி வந்த கல்வெட்டுத்தான் மாயர்களின் நாட்காட்டி. ஆனால் அந்த செய்தியை முற்றுமுழுதாக சரியான முறையில் மொழிபெயர்க்கும் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றைய மனிதர்களிடம் மங்கித்தான் போய்விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டப்படி புரிந்துகொண்டார்கள். ஆனால் எல்லோருடைய கருத்துக்களும் ஒரு விடயத்தில் ஒத்துப்போகிறது. அதுதான் நாட்காட்டியின் ஆரம்பகாலமும் முடிவுக்காலமும். கி.மு 20ம் திகதி செப்டம்பர் மாதம் 3113 ஆம் ஆண்டை தொடக்க ஆண்டாக கொண்ட அந்த நாட்காட்டி21ம் திகதி டிசம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அந்த நாட்காட்டி எம்மவர்களின் நாட்காட்டியிலிருந்து சற்று வேறுபட்டது. நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 கின் = 1 துன்
7200 கின் = 1 கதுன்
144 002 கின் = 1 பக்துன்
1 872 025 கின் = 13 பக்துன்
2 880 025 கின் = 1 பிக்துன்
57 600 025 கின் = 1 கலப்துன்

இப்படியாக விரிகிறது மாயர்களின் நாட்காட்டி. இது இயற்கை மாற்றங்களையும் காலநிலைகளையும் அடிப்படையாகக்கொண்டது. அது மட்டுமன்றி கடவுள்களுடன்பேசுவதாகவும் வேற்றுக்கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்வதாகவும் வரையப்பட்டுள்ள சித்திரங்களும் மாயர்களைப்பற்றி ஒரு புதிய எண்ணக்கருவை உருவாக்குகின்றன.
மாயன்களின் கணிப்புப்படி உலகம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உலகம் குறித்த காலத்திற்கு ஒரு முறை புதிப்பிக்ப்படும். உலக வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து சரித்திரம் படைத்த முக்கிய இடங்களான சிந்துசமவெளி, எகிப்து மக்களிடையேயும் இத்தகைய நம்பிக்கைகள் குடிகொண்டுள்ளன. சிந்துநதியோரம் தோன்றிய எமது நாகரிகத்தில் பிரளய காலம் என குறிப்பிடப்படுவதும் நைல்நதிக்கரையோலம் நடைபயின்ற எகிப்திய நாகரிகத்தில் Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் காலமென குறிப்பிடப்படுவதும் இவ்வாறானதொரு மாற்றமேற்படும் காலம்தான்.

மாயர்களின் வானியல் அறிவுக்கு அவர்களுடைய சூரியக்கடவுளுக்கான கோயிலிலுள்ள சூரியனின் தட்சணாயன, உத்தராயண கால மாற்ற நாளில் மட்டும் ஒளிபுகக்கூடிய மண்டபமே சாட்சி. அதுமட்டுமன்றி மந்திர மாயங்களிலும் கைதேர்ந்து விளங்கிய மாயர்களின் கணிப்பை இலகுவில் புறந்தள்ளமுடியாது. மாயர்களின் நாட்காட்டியுடன் ஒத்தூதும் வண்ணம் விஞ்ஞானிகளும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளனர். விண்கல் ஒன்று பூமியுடன் மோதலாம் என்றும் சூரியப்புயல் புவியை தாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கட்டியம் கூறுகின்றனர். பூமியின் மின்காந்தப்புலங்களின் திசை மாற்றமடையலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அதேசமயம் உலகப்புகழ்பெற்ற தீர்க்கதரிசி நஸ்ரடோமஸ் இன் கணிப்புக்கள் 2012 ஐயும் தாண்டி நீள்வதால் 2012 டிசம்பர் 23 உலக அழிவுக்குரிய நாளல்ல எனக்கொள்ளலாம்.

உலகஅழிவைப்பற்றிய செய்திகள் வந்ததிலிருந்து ஒப்பிட்டு பார்க்கையில் மாயர்களின் நகரப்பகுதி சுற்றுலாப்பயணிகளால் நிறைந்துவிட்டது. நல்ல வருமானம் கொழிக்கும் துறையாக சுற்றுலாப்பயணத்துறை அரசுக்கு காசை அள்ளிக்கொட்டுவதாக தகவல். சரியான சமயம் பார்த்து வெளிவந்த 2012 உலக அழிவு தொடர்பான திரைப்படமும் சக்கைப்போடு போட்டு தயாரிப்பாளருக்கு பணமழை பொழிந்ததும் அறிந்ததே. அதெல்லாவற்றையும் தூக்கிவிழுங்கும் சம்பவங்கள் இலங்கையின் சில பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண மனித பலவீனத்தை பயன்படுத்தி மதம் மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவது வேடிக்கையானது. பல இடங்களில் சுவரொட்டிகளாகவும் சில இடங்களில் வீடுவீடாக பிரச்சாரமாகவும் இவ்வாறு முழங்கப்படுகிறது.

”உலக அழிவிலிருந்து உங்களைக்காக்க ********** ஆல் மட்டுமே முடியும், ஆகவே விரைவாக  ********** இனுடைய பாதத்தை பற்றிக்கொள்ளுங்கள்.”

இதே கூட்டம் 2000 ம் ஆண்டு (மிலேனியம்) ஆரம்பத்தின்போதும் இதே முறையை பயன்படுத்தி கூட்டம் சேர்த்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
இப்படியாக ஒன்றுமே இல்லாத விடயத்தை சுயலாபங்களுக்காக ஊதிப்பெரிதாக்குவதாக வாதிடும் தரப்பின் கருத்துக்களையும் வெறுமனே ஒதுக்கிவிடமுடியாது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் உலகில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதே தவிர சூரியமண்டலத்திலிருந்து சுற்றும் பூமி காணாமல் போய்விடும் என்ற அளவிற்கு யோசிக்கத்தேவையில்லை.

மாயன் நாகரிகம்

1839ம் ஆண்டு…அதிகாலைப்பனிவேளை…அமெரிக்க மத்திய அடர்காட்டுக்குள் சூரிய ஒளி மெல்ல எட்டிப்பார்க்கிறது. அந்த மங்கலான செவ்வொளியில் இரு மனித உருவங்கள் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன. திடீரென தேடியது கிடைத்த சந்தோசம் ஆயிரம் மின்னல்களின் பிரகாசமாய் அந்த முகங்களில்…. அந்த பிரகாசமே அவற்றை அடையாளம் காட்டுகின்றன. ஆம் அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens ம் அவரது உதவியாளரும்தான் அவர்கள். எதைத்தொலைத்தார்கள் அந்த அடர்வனத்தில்? எதைக்கண்டுபிடித்தார்கள் அங்கு?......
மாயன்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி மறைந்த ஒரு சமூகத்தின் வாழ்க்கைத்தடங்கள் காட்டுக்கொடிகளோடு கதை பேசியவாறே காலத்தின் சரித்திரப் பதிவுகளில் இருந்து காணாமல்போய்விட்டன. அந்த இனம் ஒன்றும் சமான்யப்பட்டதல்ல என்று தொடர்ந்த அகழ்வாராய்வுகள் கட்டியம் கூறின. பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவியலிலும் கட்டுமானத்திலும் உச்சத்தில் இருந்த ஒரு சமுகம் உலகிலிருந்து அடியோடு மறைந்து விட்டது. அவர்கள் நிர்மாணித்துக்கொண்டிருந்த சில கட்டுமானங்கள் பாதியிலேயே பாழடைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை.
அந்த இனம்தான் மாயன் இனம். மனித வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து விண்ணை முட்டிய வரலாற்றுக்காவியம் அவர்களது வாழ்க்கை முறை. ஆனால் அந்த வரலாற்றை காலத்தின் வேகம் காற்றில் கரைத்து விட்டது.

மாயன் இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அடியோடு அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அக்னிபகவானுக்கு இரையாக்கப்பட்டன.
மாயன்
இன்று எத்தனையோ அறிவியல் வளர்ச்சியை கண்டுவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் எங்களது கட்டுமானங்களை விட அவர்களது கட்டுமானங்கள் காலத்தைவென்று கம்பீரமாக இன்றும் உள்ளன. பெரிய அளவிலான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றத்தக்க கலைத்திறன்களாகும்.
தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறன. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.

மாயன்
மாயன் நகர பகுதியில் காணப்படும் Stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் Heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.  மாயன்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.
Bonamak என்ற இடத்தில் அமைந்த  மாயன்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள்  மாயன்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .

மாயன்
மாயன்கள் இவ்வுலக ஆரம்பத்தில் Itzam Na எனப்பட்ட கடவுளும் கடலும் ஆகாயமும் மட்டுமே இருந்ததாக நம்பினார்கள். Itzam Na மனிதர்களை களிமண்ணிலிருந்து தயாரிக்க முயன்றார் ஆனால் அது கைகூடாததால் மரத்திலிருந்து மனித படைத்தார்.ஆனால் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதால் மனிதனுக்கு சிந்திக்கவோ கதைக்கவோ முடியாதிருந்தது. நீண்ட முயற்சியின் பின் Itzam Na நீரையும் சோளத்தையும் பயன்படுத்தி இன்றைய மனிதர்களை படைத்தார் என நம்பினார்கள். மாயர்கள் உலகை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என பிரித்திருந்தனர். மாயர்களின் வானியல் ஒரு மரமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. மரத்தின் மேற்பகுதி சொர்க்கமாகும். அது இறைவனின் வசிப்பிடமாகும். மரத்தின் வேர்ப்பகுதி பாதாள உலகமாகும். சூரியன் இரவில் பாதாள உலகிற்கு சென்று ஓய்வெடுக்கிறான். (மாயர்களின் மொழியில் Xibalba -பாதாள உலகம் , Cab -சொர்க்கம் , Caan - புவி, Yakche – அண்டத்தை குறிக்கும் மரம்.)
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்தினார்கள். அவர்களது ஆலயங்களுள் சுவரில் தேவதைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.. Guatemala பகுதியில் சூரிய சந்திர்யளுக்கான கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Chichen ItzaTikal கோயில் , Inscription கோயில் என்பனவும் பிரசித்தமானவை.


 

மாயன்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.

மாயர்கள் 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன்
ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை  மாயன்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள்  மாயன்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.

900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில்  மாயன்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம்  மாயன் நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.
இதன் பின் ஆராய்ச்சியாளர்கள்,  மாயன்களின் வம்சாவழியினர் மெக்ஸிகோ, குவதிமாலா பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள்  மாயன்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மாயன்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். ஆனால் ஸ்பானியர்களின் படையெடுப்பும் மாயர்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மண்ணோடு மறைந்த  மாயன்களின் வாழ்க்கைமுறை இன்றும் புதிராகவே உள்ளது. அந்த புதிரின் விடை இன்னமும் ஆராய்ச்சியாளர்களால் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆவிகள் அட்டகாசம்

1987 ம் ஆண்டு உப்புக்காற்று உரசிச்செல்லும் புங்குடுதீவில் அந்த வீட்டில் இனம்புரியாத அமானுஷ்யங்கள் நடமாடிக்கொண்டிருந்தன…. வீட்டிலிருந்தவர்களின் முகங்கள் இருண்டுபோயிருந்தன. அவர்களது உடல்கள் பயத்தால் உறைந்து போயின… என்ன காரணம்?… ஆவிகளின் அட்டகாசம் அவர்களது வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.
ஆவி
திடீர் திடீரென்று கல்மழை அவர்கள் வீட்டில் பொழியத்தொடங்கியது. வீட்டுக்கூரை மீதும் வீட்டின் உள்ளேயும் கற்கள் வந்து விழத்தொடங்கின. அந்த வீட்டுக்கு சொந்தக்காரி கதவைத்திறந்து வெளியேவந்து ”யாரது?” என்று குரல் கொடுத்துப்பார்த்தாள். கல்மழை அதிகரித்ததே தவிர யாரும் இருப்பதற்கான அடையாளத்தை காணவில்லை. தென்னைமரவட்டிலிருந்து எரிந்து கறுத்துப்போன கற்கள் வந்து விழுந்தன. பதிலுக்கு அவளும் ஒரு கல்லை எடுத்து தென்னை மரத்தை நோக்கி எறிந்து பார்த்தாள். சடசடவென கற்கள் அவளைநோக்கி எறியப்பட்டன. பயத்தால் ஓவென கத்தியபடி வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.வீட்டிற்கு முன்னாலிருந்த அவர்களது கடையில் வீட்டு உரிமையாளர் பொருட்களை நிறைபார்த்தவண்ணம் நின்றுகொண்டிருந்தார். கற்கள் அவரது தராசுத்தட்டிலும் வந்து விழுந்தன.
ஆறே மாதமான ஆண்குழந்தையும் இரண்டரை வயதுள்ள பெண்குழந்தையையும் வைத்துக்கொண்டு அவர்களால் எதையும் செய்யமுடியாமல் தத்தளித்தார்கள்.

தகவல் உறவினர்களுக்கிடையிலும் சுற்றத்தாருக்கிடையிலும் காட்டுத்தீயாய் பரவியது. ஊரெங்கும் ”எறிமாடனை ஏவிவிட்டுட்டாங்கள்” என்ற கதையாய் இருந்தது. அனைவரது சந்தேகக்கண்களும் பின் வீட்டில் குடியிருந்த கிழவனின்மேல்தான் படிந்தது. அந்தக்கிழவனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் கடையில் கடன் வாங்கியது தொடர்பாக தீராத பிணக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அந்தக்கிழவனுக்கு மந்திர தந்திரங்களில் திறமை இருப்பதாகவும் அவனது உறவினர்கள் மட்டக்களப்பில் பிரசித்தமான மந்திரவாதிகள் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் நேரடியாக எதுவும் செய்யமுடியாத நிலை.
ஆவி
உள்ளூர் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தவண்ணம் வீட்டை சுற்றிவந்தார்கள். எலுமிச்சம்பழங்களை உருட்டிவிட்டார்கள். போதுமான அளவுக்கு பணத்தையும் கறந்துகொண்டார்களே தவிர பலன் எதுவும் இல்லை. மேலும் மேலும் கல்லெறி அதிகமானதேயொழிய குறையவில்லை. திடீரென்று முற்றத்தில்நின்ற கார் கண்ணாடியின்மீது பாதிச்செங்கல் அளவுள்ள கல்லொன்று வந்து விழுத்தது ஆனால் கார்க்கண்ணாடி உடையவேயில்லை. வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தையின் மார்பிலும் கற்கள் வந்து விழுந்தன ஆனால் குழந்தையின் தூக்கம் கலையவில்லை. தாய் குழந்தையை மடியில் வளர்த்தியவண்ணம் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யத்தொடங்கினாள் மனதிற்கு ஒரு ஆறுதலைத்தந்த கந்தசஷ்டி கவசம் பிரச்சினைக்கு தீர்வைத்தரவில்லை. விடயம் முல்லைத்தீவிலிருந்த தாயின்சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த ஒரு மாந்திரிகரின் உதவியை நாடிய சகோதரிக்கு நாடிநரம்பையெல்லாம் ஒடுக்கும் செய்திதான் கிடைத்தது. அவர் வெற்றிலையில் மையை தடவி குறி சொல்ல ஆரம்பித்தார்.

உனது பிறந்தகத்தில் மாட்டுத்தொழுவத்தில் ஒரு கபில நிறப்பசு கட்டப்பட்டுள்ளது.

ஓம் கறுப்பியின்ர கன்று

அடுப்பில் பானையில் பால் கொதித்துக்கொண்டிருக்கிறது….முற்றத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க தடித்த ஒரு ஆள் கிடுகு பின்னிக்கொண்டிருக்கிறார்…..சரியா

இருக்கலாம்..அவர்தான் என்ர அப்பா……. தங்கைச்சியின் வீட்டுப்பிரச்சினை…..

இருக்குது….அங்க உண்மையிலேயே ஆவிகளின் தொல்லை இருக்குது. கவனமாயிருக்கவேண்டும் பிள்ளைகளை கிணற்றுக்குள் தூக்கிப்போடும் அளவிற்கு அவற்றின் தொல்லை அதிகரிக்கும்.

ஆனால் தொலைதுரம் என்பதால் வீட்டிற்கு வந்து பிரச்சினையை தீர்த்துவைக்க அவர் மறுத்து விட்டார். கடைசி நம்பிக்கையும் மறைந்து போனது. உடனடியாக புங்குடுதீவுக்கு பயணமானாள் சகோதரி.



விநாசித்தம்பி
அவள் புங்குடுதீவை அடைந்தபோது நேரம் பின்னேரம் ஆறு மணி. தங்கையின் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஆவேசம் வந்து ஆடத்தொடங்கினான். வீட்டில் அங்கங்கு நிலத்தை கிளறி படையல், கழிப்பு செய்த பொருட்களை எடுக்கத்தொடங்கினான். பிரச்சினை கையை மீறிப்போவதை உணர்ந்த அவர்கள் மறுநாள் அவர்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் அருளாசி பெற்ற அருட்கவி விநாசித்தம்பிஐயாவை சந்திக்க பயணமானார்கள். விநாசித்தம்பி ஐயா கடையில் வேலைசெய்து கொண்டிருந்த இளைஞனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்லி இருவிதமான திருநீறை மந்திரித்து கொடுத்து ஒன்றை குடும்பத்தவர்கள் அனைவரும் தரித்துக்கொள்ளுமாறும் மற்றையதை கரைத்து வீட்டைச்சுற்றி  தெளிக்குமாறும் கொடுத்தார். அவர் மந்திரித்துகொடுத்த திருநீறும் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க கொடுத்த எலுமிச்சம்பழங்களும் ஒரேநாளில் ஆவிகளின் கொட்டத்தை அடக்கின. அதன்பின்னர் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அந்தக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவருகிறது.