Sunday, 17 June 2012

அதிசயப் பூனை


            பிரஷ்னேவ்            
 லியோனிட் எலிச் பிரஷ்னேவ் இவர் ரஷ்ய நாட்டின் பிரதமராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். 1906ல் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், அரசியலில் நுழைந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி ஸ்டாலினை அடுத்து மிக வலிமையான தலைவராகப் போற்றப்பட்டார். மிகுந்த மக்கள் செல்வாக்குடன் விளங்கினார். ரஷ்யாவை ஒரு வலிமையான நாடாக முன்னெடுத்துச் செல்வதில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.
ஒருமுறை திபெத் மதத் தலைவரான தலாய் லாமாவைச் சந்தித்து உரையாடினார் பிரஷ்னேவ். தனது சந்திப்பின் நினைவாக தலாய் லாமா ஒரு கறுப்புப் பூனை ஒன்றை நினைவுப் பரிசாக ப்ரஷ்னேவிற்கு அளித்தார். அவ்வாறு பூனையைக் கொடுக்கும் போது, அதை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வரும்படியும், அதற்கு ஏதாவது துன்பம் நேரிட்டால் அது அதை வளர்ப்பவரையும் அவ்வாறே பாதிக்கும் என்றும் கூறி எச்சரித்து அனுப்பினார். பூனைக்கு அதை அளித்த தலாய் லாமாவின் நினைவாக ‘லாமா’ என்றே பெயர் சூட்டிய பிரஷ்னேவ் அதை அன்போடு வளர்த்து வந்தார். அந்தப் பூனை அமானுஷ்ய ஆற்றல் மிக்கதாக இருந்தது. பிரஷ்னேவிற்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்து அவரை பல சமயங்களில் எச்சரித்து அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.
           
ஒருமுறை பிரஷ்னேவ், விண்வெளிப் பயணம் முடிந்து பூமிக்குத் திரும்பிய வெற்றி வீரர்களை வரவேற்கக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் எதிர்ப்பட்ட பூனை அவரைத் தடுத்ததுடன், வழியிலேயே படுத்துக் கொண்டும் விட்டது. இதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட பிரஷ்னேவ், தான் அப்போது பயணப்பட வேண்டியிருந்த காரை அனுப்பி விட்டு, சிறிது நேரம் பூனையைக் கொஞ்சி சமாதானம் செய்து விட்டுப் புறப்பட்டார்.
            அவர் உண்மையிலேயே செல்ல வேண்டிய கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. மற்ற பாதுகாப்பு வீரர்களின் கார்கள் அதனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. பின்னால் வெகு தொலைவில் தனி கார் ஒன்றில் பிரஷ்னேவ் வந்து கொண்டிருந்தார். அவர், முதலில் செல்லும் அவருக்குச் சொந்தமான காரில் தான் வந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்த எதிரிகள் அந்தக் காரைச் சரமாரியாகச் சுட்டனர். அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஓட்டுநரும், உதவியாளரும் அதே இடத்தில் பலியாகினர்.
பூனை தடுத்ததால் அந்தக் காரில் பயணம் செய்யாமல் தவிர்த்த பிரஷ்னேவ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அது முதல் பூனை லாமாவின் மீது அவரது அன்பு அதிகமானது.
மற்றொருமுறை முக்கியமான ஒரு சந்திப்புக்காக வேக வேகமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார் பிரஷ்னேவ். எங்கிருந்தோ வேகமாக வந்த பூனை ’லாமா’ அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. வித்தியாசமான குரலில் கத்தியது.
ஏதோ ஒரு ஆபத்தையே ’லாமா’ முன்னறிவிக்கிறது என்று உணர்ந்த பிரஷ்னேவ், தனது உதவியாளரை முன்னால் அதே காரில் அனுப்பி விட்டு, தான் தாமதமாக வேறொரு காரில் சென்றார்.
அவர் சென்று கொண்டிருக்கும் போதுதான் அந்தச் சேதி வந்தது. அவர் முன்பு செல்லவிருந்த கார் ஒரு லாரியில் மோதி, பிரஷ்னேவ் அமர்ந்திருக்கக் கூடிய இருக்கையில் இருந்தவர் மாண்டு விட்டார் என்று.
அதுமுதல் பூனை லாமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்தார் பிரஷ்னேவ். தன்னுள் ஒரு பாதியாகவே அதைக் கருத ஆரம்பித்தார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் சுற்றிக் கொண்டிருந்த லாமா 1982ம் ஆண்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்தது. அதே ஆண்டில் பிரஷ்னேவும் காலமானார்.

Saturday, 16 June 2012

லிங்கனும் கென்னடியும்


அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத நிஜங்களாக உள்ள அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே…



ஆப்ரஹாம் லிங்கன்


ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946
லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856
ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956
லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960

ஜான் எஃப். கென்னடி

லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913
லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.
இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.
இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.
இருவருக்குமே காயம் பட்டது தலைப்பகுதியில்
லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்
இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.
இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.
இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பதுதான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.
கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.
லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்
கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்
கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள். லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.
இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.
லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ’ஃபோர்ட்’
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில்.
லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.
பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
இல்லை.. இல்லை.. இதெல்லாம் தற்செயல்தான் என்கிறீர்களா? ஓரிரண்டு விஷயங்கள் வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். இவ்வளவு விஷயங்களும் தற்செயலாக இருக்குமா என்ன?

நடுங்க வைத்த நாஸ்ட்ரடாமஸ்


நாஸ்ட்ரடாமஸ்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.  இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது
நாஸ்ட்ரடமஸ்
நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.
ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ். அச்செல்வந்தரின் மாளிகையின் பின்புறம் இரண்டு பன்றிகள் கட்டப்பட்டு இருந்தன. ஒன்று கறுப்பு;  மற்றொன்று வெள்ளை.
அந்தச் செல்வந்தர் அவற்றைக் காட்டி, “இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம் என்று உங்களால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியுமா?”, என்று கேட்டார்.
“சந்தேகமென்ன? கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் உண்டு விடும்,” என்றார் நாஸ்ட்ரடாமஸ்.
”இந்த மாளிகைக்குள் ஓநாயா?” என்று கிண்டலாகச் சிரித்த பிரபு அங்கிருந்து அகன்றார். பின் நாஸ்ட்ரடாமஸுக்குத் தெரியாமல் ரகசியமாக சமையற்காரரை அழைத்தவர், அந்த வெள்ளைப் பன்றியைத்தான் கொன்று சமைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே சமையற்காரனும் அவர் கண் முன்னாலேயே அந்த வெண்ணிறப் பன்றியைக் கொன்று சமைக்க உள்ளே எடுத்துச் சென்றான்.
விருந்தும் முடிந்தது. அனைவரும் உண்டு முடித்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸிடம், “நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?”  என்று கேட்டார். உடனே நாஸ்ட்ரடாமஸ், ”அதுதான் முன்பே சொன்னேனே, கறுப்புப் பன்றியைத்தான் சாப்பிட்டோம்” என்றார்.
 கிண்டலாகச் சிரித்த அப்பிரபு, உடனே சமையற்காரரை அழைத்தார். “எந்தப் பன்றியைச் சமைத்தாய்  என்பதை இங்கு எல்லாரிடமும் சொல்” என்றார்.
சமையற்காரர், “கறுப்புப்பன்றி” என்றார்.
பிரபுவுக்கு ஒரே அதிர்ச்சி.
” நான் உன்னை வெள்ளைப் பன்றியைத்தானே சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதனை நீ கொன்றாய்?”  என்றார் பிரபு கோபத்துடன்.
“ஆம்! பிரபுவே! ஆனால் அடுப்பில் வேக வைக்க வைத்திருந்த பன்றி இறைச்சியை உங்கள்  வேட்டை நாய் கவ்வி இழுத்துச்சென்று விட்டது. அதனால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்” என்றார்.
அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு ஓநாய்க்குப் பிறந்தது.
நாஸ்ட்ரடமஸின் ஆரூடப் புத்தகம்
நாஸ்ட்ரடமஸின் பல ஆருடங்கள் புத்தகமாக வெளிவந்தும் புகழ் பெற்றன. 
இவ்வாறு தன் வாழ்வில் பல்வேறு அதிசய ஆருடங்களைச் சொன்ன, பல மன்னர்களை, பிரபுக்களை, செல்வச் சீமான்களை நடுங்க வைத்த நாஸ்ட்ரடாமஸின் ஆருடங்கள், அவர் இறந்த பின்னும் பலித்தது. இன்றும் பலித்து வருகிறது என்பது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா

அமானுஷ்யங்கள் இருக்கிறதா?-3 :

வணக்கம் நண்பர்களே!

முன்பே அமானுஷ்யங்கள் இருக்கிறதா?? என்பதை பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன்! அது என் தோழி ஒருத்திக்கு நடந்தவற்றின் மூலம் எழுதினேன்! இது என் சித்தப்பா எனக்கு கூறியது!
எங்கள் ஊரில் ஒரு பெண் தனியாக கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்தாள்! என்ன காரணத்தினாலோ குழந்தையை தனியே விட்டு அவள் இறக்க நேர்ந்தது! தாயில்லாத அந்த குழந்தையை யாருமே வளர்க்க முன் வராததால் அந்த குழந்தை அந்த வீட்டிலேயே கவனிக்க பட்டு வந்தது!
இது போன்ற தருணத்தில் தான் பல வதந்திகள் பரவின!
இறந்து போன அன்னை குழந்தையை பிரிய மனமில்லாமல் இரவில் வந்து அதற்கு பாலூட்டுவதாக சொன்னார்கள்!
என் சித்தப்பா இளம் வயதினர் ஆகையால் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்! ஒரு நாள் ஷிபிட் முடிந்து இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்தவர் அந்த வீட்டை தாண்டி வருமாறு நேர்ந்தது!
எதிர்பாராமல் தன் பின்னே ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி!
இறந்ததாக கூறிய அந்த பெண்மணியின் உருவம் காற்றில் மிதந்து சென்று அந்த வீட்டை அடைந்ததை கவனித்தார்! இருந்தும் இது ஏதோ பிரம்மை தான் என்று பயபடாமல் அந்த வீட்டை எட்டி பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி அந்த தாயின் உருவம் தன் குழந்தைக்கு பாலூட்டுவதையும் அதன் கண்களிலிருந்து ஏதோ திரவம் போல் கண்ணீர் வடிவதையும் கண்டிருக்கிறார்!
பார்த்தவருக்கு அதிர்ச்சி ஒரு புறம் இருக்க மனம் கண்ட காட்சியில் பாரமாய் உணர்ந்திருக்கிறது! தாயை பிரிந்த அந்த குழந்தையின் நிலையையும் மனமில்லாமல் குழந்தையை பிரிந்த அந்த தாயின் ஆத்மாவையும் நினைத்து கலங்கியிருக்கிறார்!
இது போல் பாசத்தால் கட்டுண்டு ஆத்மாக்கள் உண்மையிலேயே உலவுவது உண்டா?? கண்களினால் பாக்காத வரை நமக்கு நம்பிக்கை வருவது அரிதே!

அமானுஷயங்கள் இருக்கிறதா??-பகுதி இரண்டு!


அமானுஷயங்கள் பற்றி எனக்கு சந்தேகங்கள் ஏற்படுத்துகிற நிகழ்வுகள் என் வாழ்வில் பல நிகழ்ந்துள்ளன! 
அதில் அடுத்த சம்பவம் பற்றி தான் இதில் குறிப்பிட்டுள்ளேன்!
என் நெருங்கிய தோழி ஒருத்தியின் தாய் அவள் எட்டாவது படிக்கும் போதே இறந்து விட்டார்கள்! பெரிதாய் ஒன்றும் நோய்வாய் படாதவர்கள் ஏன் திடீர் என்று இறந்தார்கள் என்று அனைவருக்குமே ஆச்சர்யம்!
டாக்டர்கள் தைராய்டு பிரச்சனையால் இறந்ததாய் கூறினாலும் அதை அவ்வளவாய் நம்ப முடியாமல் போகவே அவர்களது கணவர் ஒரு கோவிலை நாடினார்!
அங்கு இருந்த சாமி ஒருவர் இது பில்லி சூனியத்தால் வந்த இறப்பு எனவே என் தோழியின் தந்தை அதிர்ந்தார்!
யார் இதை செய்தார்கள் என்று கேட்க அதற்கு அவர் அங்கிருக்கும் அறையில் சென்று உங்களுக்கு யார் மீது எல்லாம் சந்தேகமோ அவர்கள் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி கொண்டுவரவும் என்று கூறினார்!
அதன் படியே செய்தார் தந்தை! பிறகு அந்த சுவாமி அந்த காகிதத்தை எரித்து விடும்படி கூறினார்! எரித்த காகித சாம்பலை ஒரு சொம்பு நீரில் போட சொல்லவே அவரும் அதன்வாறே செய்தார்!
அந்த நீரில் இருந்து ஒரு துண்டு காகிதம் மட்டும் வந்ததாகவும் அதில் அப்படி செய்தவர்கள் பெயர் தெரிந்ததாம்!
அது யார் என்று கேட்டவர்க்கு கிடைத்த பதிலில் சர்வமும் ஒடுங்கி போனார்!
இயற்கையிலேயே என் தோழியின் தாயார் கடவுள் பக்தி நிறைந்தவர்கள்! அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டதாம்! நல்ல நண்பர்களாய் தான் இருந்தார்கள்!
அந்த குடும்பம் ஏழ்மையில் முன்னேற முடியாமல் தவித்த போது ஏதோ வசியம் செய்யும் ஆட்களிடம் சென்று ஏன் எங்கள் நிலை இவ்வளவு கீழ் மட்டத்திலேயே இருக்கிறது?? நாங்கள் முன்னேறும் மார்கம் கூறுங்கள் என்று கேட்க அதற்கு அந்த ஆட்கள் கூறியது நல்ல குடும்பத்தில் பிறந்து நன்றாக வாழும் ஒரு பெண்ணின் வாழ்வை நீங்கள் கெடுத்து அவளை பலி கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் தான் நீங்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்று சொல்ல அதன் படியே என் தோழியின் தாயாரை வசியம் செய்து அவர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து சென்று குடிக்கும் பானத்தில் எதையோ கலக்கி கொடுத்து இப்படி செய்து விட்டதாக தகவல் கொடுத்திருகிறார் அந்த சுவாமி!
மக்களில் இப்படியும் எப்படி இருக்கிறார்கள்?? அவர்கள் முன்னேற்றத்திற்க்காக ஒரு அப்பாவி பெண்ணின் உயிரை பலிகொடுப்பது சரியா??
இந்த தவறுக்கெல்லாம் ஏது தண்டனை?? 
கொலைகார கூட்டம் இன்று சகல வசதிகளுடன் நன்றாக இருக்கிறது!! ஆனால் இங்கு ஒரு குடும்பத்தில் குழந்தைகள் தாயின்றி தவிக்கிறது!!
என் மனதை மிகவும் பாதித்த உண்மை சம்பவம்! 

அமானுஷங்கள் இருக்கிறதா??- பகுதி ஒன்று!


இதை நம்புவதா வேண்டாமா??
மனித வாழ்வு நிலையற்ற ஒன்று! நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை ஆட்டி படைப்பது நிஜம்!
அதுவே பூமியை அந்தரத்தில் சுழல செய்வது!
கடவுள் சக்தி இருப்பதை போல் அமானுஷயங்களும் இருக்கிறதா?? நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல!
கடவுள் சிலை கண்டால் கையெடுத்து கும்பிடும் ஒரு சராசரி பெண்! இது தான் வேண்டும் என்று கேட்டால் கடவும் குடுப்பார் என்பதை கூட நம்பாதவள்!
அப்படி இருக்க கை எடுத்து கும்பிட்டு நான் கேட்கும் ஒன்று கடவுளே நீ இருக்கிறாயா?? இருந்தால் இந்த மனித இனத்தை காத்தருள்வாய் என்பதே!
ஆனால் சில நாட்களாய் நான் எதிர்கொள்ளும் விஷயங்கள் அமானுஷ்யங்களும் இருக்கிறதா?? என்று என்னை குழப்பும் விஷயங்கள்!
அதை நம்புவதற்கு ஆதாரமாய் அமைவன!
உதாரணமாய் நானே!
நான் பனிரெண்டாவது படிக்கும் போது! உருண்டு விழுந்ததில் என் முதுகெலும்பு மிகவும் பாதிக்க பட்டது அதன் பிறகு சற்று மருத்துவ உதவிகளால் தேறினேன்!
அதன் பின் அதிக நேரம் உட்காரவோ நடக்கவோ முடியாவிட்டாலும் என் உடல் நிலை வலிகளை தாங்கவும் சமாளிக்கும் நிலையில் தான் இருந்தது!
இத்தகைய சூழ்நிலையில் போன வருடம் அதாவது என் கல்லூரி மூன்றாம் ஆண்டு திடீர் என்று சற்று திரும்பும் போது என் இடது புற கால்கள் செயலிழந்தார் போல் நகர்த்த கூட முடியாமல் சிரமப்பட்டேன்!
ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்து பார்க்காத மருத்துவர் இல்லை! செய்யாத வைத்தியம் இல்லை! அனைவரும் கூறிய ஒரே பதில் என்னவென்றே தெரியவில்லை என்பதே!
என் தாய்க்கு கடவுள் பக்தி அதிகம்! என் தந்தை கூட அடிக்கடி அவரை கிண்டல் செய்வது உண்டு கூட்டு சேர்ந்து நானும்! நீங்கள் சாமியாராய் போக வேண்டியவர் அம்மா என்று! ஆனால் அவருக்கு அதில் அசைக்க முடியா நம்பிக்கை!
அவர் நம்பிக்கையில் குறுகிட்டதில்லை அதே சமயம் அதில் அதிகமாய் ஈடுப்பட்டதும் இல்லை!
என் தாய் மண்ணான திருபெரும்புதூரில் ஒரு அம்மன் சன்னதி உண்டு! அங்கு சற்றே நடுத்தர வயது மனிதரில் மேல் சட்சாத் அந்த தேவி கருமாரி அம்மனே வந்து வாக்களிப்பாள்! அங்கு சென்று வாக்கு கேட்பது என் அன்னை வழக்கம் எனக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை! ஆனால் என்னை உடன் அழைத்து சென்றால் வணங்கவும் தவறுவதில்லை!
இப்படியாக என் உடல் நிலை மிகவும் பாதிக்க பட்ட போது என்னால் உட்காருவது இனி முடியாது என்று படிப்பை நிறுத்தும் தருவாயில் ஒரு பெண்மணியின் வாயால் ( அவர் மீதும் சாமி வரும் என்று கேள்வி) தங்கள் மகளை எதாவது கோவிலுக்கு அழைத்து செல்லவும் காத்து எதிர் பட்டிருக்கலாம் என்று கூற உடனே என் தாய் என்னை திருபெரும்புதூர் அழைத்து சென்றார்!
எப்போதும் அங்கு செல்ல அடம்பிடிக்காத எனக்கு அன்று செல்லவே பிடிக்கவில்லை! என்னை அடித்து தான் அழைத்து சென்றார்கள் எனலாம்! அங்கே சென்று அன்னையின் சன்னதியில் அமர்ந்ததுமே தாய் வாய் திருந்து "என்ன முதுவதும் உடலை சப்பி போட்ட பிறகு கடைசி தருணத்தில் அழைத்து வந்திருக்கிறாய்?" எனவும் அப்படியே எங்கள் இருவருக்குமே தூக்கி வாரி போட்டது!
எனக்கு மல்லிகை என்றால் மிகவும் பிரியம் அதனால் தலை நிறைய சூடுவேன்!
அப்படி சூடிக்கொண்டு வெளியில் இரவில் சென்று வரும் போது ஏதோ ஒரு ஆன்மா என் உடலில் இருந்த எல்லாவற்றையும் உறுஞ்சி எடுத்து விட வெறும் கூடான எனக்கு அப்போது ஒரு தலை வலி தாங்கும் சக்தி கூட இல்லையாம் அதனால் தான் வலி தாங்காமல் நான் கதறுவது என்றாள் அந்த தாய்! 
அது உண்மையே எலும்பில் அடி பட்டு அதில் விரிசல் விட்டிருக்கும் போது கூட அதை பொறுத்து கொண்டு படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ந்த என்னால் போன வருடம் எந்த பாதிப்பும் இல்லாமலே ஏன் உட்காரவும் முடியவில்லை என்று நானே குழம்பியதுண்டு!
பிறகு காசு அதிகம் செலவாகாமல் ஒரு சின்ன சாங்கியம் செய்ய கூறினாள் அந்த அன்னை!
ஒரு சட்டியில் அசைவ உணவுகள் இட்டு அதை அமாவசை அன்று என்னை ஏற்றி இறக்கி மூன்று சந்துகள் ஒன்று கூடும் இடத்தில் வைத்தி விட்டு திரும்பி பார்க்காமல் வர வேண்டும் என்பதே அது! அதை செய்பவரும் தனியே சென்றால் ஆபத்து என்று ஒரு எலுமிச்சம் பழத்தை மந்திரித்து கொடுத்து அதை முந்தானையில் முடிந்து செல்லுமாறு கூற அவ்வாறே என் அன்னையும் செய்தார்!
செய்து முடித்ததும் எனக்கு ஏதோ ஒன்று என்னை விட்டு நீங்கியது போலவும்! ஏதோ ஒன்று திரும்ப கிடைத்தார் போலவும் தோன்றியது!
அது என் கற்பனையா? இல்லை நிஜமா? என்று இன்னும் தெரியாது!
ஆனால் அதற்கு அடுத்த நாளே வலிகள் நீங்கி நான் கல்லூரி சென்று மீண்டும் என் படிப்பை தொடர்ந்தேன்!
இன்னும் இது போல் நிறைய! வரும் பகுதிகளில் தொடரும்!