இதை நம்புவதா வேண்டாமா??
மனித வாழ்வு நிலையற்ற ஒன்று! நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை ஆட்டி படைப்பது நிஜம்!
அதுவே பூமியை அந்தரத்தில் சுழல செய்வது!
கடவுள் சக்தி இருப்பதை போல் அமானுஷயங்களும் இருக்கிறதா?? நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல!
கடவுள் சிலை கண்டால் கையெடுத்து கும்பிடும் ஒரு சராசரி பெண்! இது தான் வேண்டும் என்று கேட்டால் கடவும் குடுப்பார் என்பதை கூட நம்பாதவள்!
அப்படி இருக்க கை எடுத்து கும்பிட்டு நான் கேட்கும் ஒன்று கடவுளே நீ இருக்கிறாயா?? இருந்தால் இந்த மனித இனத்தை காத்தருள்வாய் என்பதே!
ஆனால் சில நாட்களாய் நான் எதிர்கொள்ளும் விஷயங்கள் அமானுஷ்யங்களும் இருக்கிறதா?? என்று என்னை குழப்பும் விஷயங்கள்!
அதை நம்புவதற்கு ஆதாரமாய் அமைவன!
உதாரணமாய் நானே!
நான் பனிரெண்டாவது படிக்கும் போது! உருண்டு விழுந்ததில் என் முதுகெலும்பு மிகவும் பாதிக்க பட்டது அதன் பிறகு சற்று மருத்துவ உதவிகளால் தேறினேன்!
அதன் பின் அதிக நேரம் உட்காரவோ நடக்கவோ முடியாவிட்டாலும் என் உடல் நிலை வலிகளை தாங்கவும் சமாளிக்கும் நிலையில் தான் இருந்தது!
இத்தகைய சூழ்நிலையில் போன வருடம் அதாவது என் கல்லூரி மூன்றாம் ஆண்டு திடீர் என்று சற்று திரும்பும் போது என் இடது புற கால்கள் செயலிழந்தார் போல் நகர்த்த கூட முடியாமல் சிரமப்பட்டேன்!
ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்து பார்க்காத மருத்துவர் இல்லை! செய்யாத வைத்தியம் இல்லை! அனைவரும் கூறிய ஒரே பதில் என்னவென்றே தெரியவில்லை என்பதே!
என் தாய்க்கு கடவுள் பக்தி அதிகம்! என் தந்தை கூட அடிக்கடி அவரை கிண்டல் செய்வது உண்டு கூட்டு சேர்ந்து நானும்! நீங்கள் சாமியாராய் போக வேண்டியவர் அம்மா என்று! ஆனால் அவருக்கு அதில் அசைக்க முடியா நம்பிக்கை!
அவர் நம்பிக்கையில் குறுகிட்டதில்லை அதே சமயம் அதில் அதிகமாய் ஈடுப்பட்டதும் இல்லை!
என் தாய் மண்ணான திருபெரும்புதூரில் ஒரு அம்மன் சன்னதி உண்டு! அங்கு சற்றே நடுத்தர வயது மனிதரில் மேல் சட்சாத் அந்த தேவி கருமாரி அம்மனே வந்து வாக்களிப்பாள்! அங்கு சென்று வாக்கு கேட்பது என் அன்னை வழக்கம் எனக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை! ஆனால் என்னை உடன் அழைத்து சென்றால் வணங்கவும் தவறுவதில்லை!
இப்படியாக என் உடல் நிலை மிகவும் பாதிக்க பட்ட போது என்னால் உட்காருவது இனி முடியாது என்று படிப்பை நிறுத்தும் தருவாயில் ஒரு பெண்மணியின் வாயால் ( அவர் மீதும் சாமி வரும் என்று கேள்வி) தங்கள் மகளை எதாவது கோவிலுக்கு அழைத்து செல்லவும் காத்து எதிர் பட்டிருக்கலாம் என்று கூற உடனே என் தாய் என்னை திருபெரும்புதூர் அழைத்து சென்றார்!
எப்போதும் அங்கு செல்ல அடம்பிடிக்காத எனக்கு அன்று செல்லவே பிடிக்கவில்லை! என்னை அடித்து தான் அழைத்து சென்றார்கள் எனலாம்! அங்கே சென்று அன்னையின் சன்னதியில் அமர்ந்ததுமே தாய் வாய் திருந்து "என்ன முதுவதும் உடலை சப்பி போட்ட பிறகு கடைசி தருணத்தில் அழைத்து வந்திருக்கிறாய்?" எனவும் அப்படியே எங்கள் இருவருக்குமே தூக்கி வாரி போட்டது!
எனக்கு மல்லிகை என்றால் மிகவும் பிரியம் அதனால் தலை நிறைய சூடுவேன்!
அப்படி சூடிக்கொண்டு வெளியில் இரவில் சென்று வரும் போது ஏதோ ஒரு ஆன்மா என் உடலில் இருந்த எல்லாவற்றையும் உறுஞ்சி எடுத்து விட வெறும் கூடான எனக்கு அப்போது ஒரு தலை வலி தாங்கும் சக்தி கூட இல்லையாம் அதனால் தான் வலி தாங்காமல் நான் கதறுவது என்றாள் அந்த தாய்! 
அது உண்மையே எலும்பில் அடி பட்டு அதில் விரிசல் விட்டிருக்கும் போது கூட அதை பொறுத்து கொண்டு படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ந்த என்னால் போன வருடம் எந்த பாதிப்பும் இல்லாமலே ஏன் உட்காரவும் முடியவில்லை என்று நானே குழம்பியதுண்டு!
பிறகு காசு அதிகம் செலவாகாமல் ஒரு சின்ன சாங்கியம் செய்ய கூறினாள் அந்த அன்னை!
ஒரு சட்டியில் அசைவ உணவுகள் இட்டு அதை அமாவசை அன்று என்னை ஏற்றி இறக்கி மூன்று சந்துகள் ஒன்று கூடும் இடத்தில் வைத்தி விட்டு திரும்பி பார்க்காமல் வர வேண்டும் என்பதே அது! அதை செய்பவரும் தனியே சென்றால் ஆபத்து என்று ஒரு எலுமிச்சம் பழத்தை மந்திரித்து கொடுத்து அதை முந்தானையில் முடிந்து செல்லுமாறு கூற அவ்வாறே என் அன்னையும் செய்தார்!
செய்து முடித்ததும் எனக்கு ஏதோ ஒன்று என்னை விட்டு நீங்கியது போலவும்! ஏதோ ஒன்று திரும்ப கிடைத்தார் போலவும் தோன்றியது!
அது என் கற்பனையா? இல்லை நிஜமா? என்று இன்னும் தெரியாது!
ஆனால் அதற்கு அடுத்த நாளே வலிகள் நீங்கி நான் கல்லூரி சென்று மீண்டும் என் படிப்பை தொடர்ந்தேன்!
இன்னும் இது போல் நிறைய! வரும் பகுதிகளில் தொடரும்!