Sunday, 17 June 2012

அமானுஷ்யங்கள்-01

சில விடயங்கள் புரியாத புதிராக தொடர்ந்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம் தொடர்ந்து தனக்கே உரிய வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தாலும் அதனிடத்தில் இருந்து  பதில் கிடைக்காத கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன விஞ்ஞானத்தால் ஒரு செயல் எப்படி நடைபெறுகிறது என்பதை சுலபமாக கூறிவிட முடியும் ஆனால் ஏன் நடைபெறுகின்றது என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை அப்படி பதில் கூற முனையுமையின் அதற்கே உரிய விதிகளில் அதுவாகவே மாட்டிக்கொள்ளும் விதிகளுக்கான காரணங்களாக கூறப்படுபவை ஒழுங்காக நடைபெறும் ஒரு அச்சிடன்ட் தான் எல்லாம் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா என்ற நூலில் இருந்து அவர் குறிப்பிட்ட சில  அமானுஷ்ய விடயங்கள் உங்களுக்காக ............


aug  23 1980 இல் ஆவியோடு பேசும் அலெக்ஸ் டான்ஸ் என்பவர் N .B .C ரேடியோவில் விளக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ச்சியில் பிவருமாறு குறிப்பிடுகின்றார் "ஒரு பிரபலமான ராக் பாடகர் இறக்கப் போகிறார் அவரது இறப்பு எல்லோரையும் பாதிக்கும் "

அவர் இதைக்குறிப்பிட்டு 13 நாட்களின் பின் ஜான் லென்னன் உலகின் மிகப்பிரபலமான பீட்டில்பாடகர் அவரது அப்பார்மென்ட் தில் வைத்து சுட்டு கொல்லப்படுகிறார்  யார் இறக்கப்போகிரர்கள் என்று N .B .C 6 பெயர்களை வெளியிட்டிருந்தது இதில் முதலாவதாக இருந்தபெயர் "ஜான் லென்னன் "


கம்பெல் என்ற நடிகை உடல் நலமில்லாது படுத்த படுக்கையாக இருந்தார் ஷோர என்ற நடிகை அவருக்கு உதவி செய்தார்   இதற்கு உபகாரமாக
கம்பெல் ஷோரவிற்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார் ஒரு நாரையின்  வாட்டர் கலர் ஓவியம் பின் ஷோர ஹாலிவுட் சென்றுவிட கம்பெல் பிரான்ஸ்  சென்றார் 1940 இல் தனது புதிய வீட்டில் குடிபுகுந்த ஷோர தாது கனவில் கம்பெல் தனது கல்லறையில் இருந்து கொண்டு பின்வருமாறு கேட்கிறார்
"நான் கொடுத்த பரிசை கண்டுபிடித்தாயா? நான் கொடுத்த படத்தின் பின்புறம் பார்த்தாயா?..விழித்துக்கொண்டபின் கம்பெல்தான் உயிரோடு இருக்கிறாளே என்று எண்ணியபடி ஓவியத்தின் பிரேமை   ஐ கழற்றிய  போது ஆச்சரியம்
அங்கெ ஒரு கோட்டுச் சித்திரம் இருந்தது மேக்ஸ் பேர்ம் என்ற பிரபல ஓவியர் வரைந்தது பின்புதான் ஷோர விற்கு விடயம் தெரிய வந்தது தான் கனவு கண்ட அதே தினத்தில் கம்பெல் இறந்துவிட்டார் என்று .......
யோசப் டியுலிஸ் என்பவர் 1969  ஜனவரி 16 இல் சிகாக்கோ நகரில் ஓர் ஹோட்டலில்  நுழைந்து "பேப்பர் குடப்பா ரயில் விபத்தைப்பற்றி பாக்கணும்" என்றார்
விபத்தா?என்ன ரயில் ?என்ன விபத்து என்று சுற்றி இருந்தவர்கள் குழம்பினார்கள்
"அதுதாப்பா ...இங்க இருந்து தெற்கால 2 ரயில் பனிமூட்டத்தில ஒந்டொடொஅ ஒண்டு மோதிச்சே "என்றார்
ரேடியோ போட்டார்கள் இரவு 11  மணிவரை எந்த செய்தியும் இல்லை
இரவு 1 மணி ரேடியோ  அலறியது  "சிக்காகோ விற்கு  தெற்கே இலியனாய் எக்ஸ்பிரஸ் ஐ சேர்ந்த 2  ரயில்கள் மோதி 47 பேர் காயம் 3 நபர்கள்  பலி என்று செய்தி கூறியது


தொடரும்.....

No comments:

Post a Comment