Monday 18 June 2012

அமானுஷ்ய சக்தி - கனவு உலகம்



சென்ற  பதிவில் இந்த ஐந்து புலன்களின் ஊடான உலகத்தொடர்ப்பையும் தாண்டி ஒரு வித சக்தி ,அது ஆறாவது உணர்வாக ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பது பற்றி பார்த்தோம் . உதாரணமாக ஒருவரை நினைக்கும் போது அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்.. .முதலாவது பதிவு  வாசிக்க :- அமானுஷ்யம்  - ESP முதலாவது பதிவுக்கு தந்த உற்ட்சாகத்திர்க்கு  நன்றி வாசக நண்பர்களே :)

ஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான ,மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்ப்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர்,பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி( paranormal research )  J.B. Rhineஎன்பவரால்  இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .


கூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று ,அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும் , அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர் . ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது .

இது இரு வித சாதாரண ஒளி , எக்ஸ் ரே கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு தியரி இருக்கிறது .

ஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும் .Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன், Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன் களுக்கு பொருந்தாது . காரணம் ஒரு மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு பெறுனர் இருக்க வேண்டும் .

ஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. "இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது" என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு . சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு ,ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .


ஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே அறையில்  இருக்கும் இருவருக்கும் , உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும் இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக இருப்பது உணரப்பட்டுள்ளது . ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை .மற்றும் உடலில் அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய  எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

இத்தகைய குழப்பமான  நிலையில் இன்னொரு தியரியும் முன்வைக்கப்பட்டுள்ளது . அது எமக்கு தெரியாத சமாந்தர உலகம் பற்றிய தியறியோடு  சம்மந்தப்பட்ட விடயம்  . இன்னொரு நேரம் வேறொரு நிகழ்வில் இருக்கும் எம்மால் அந்த உணர்வுகளை மட்டும் உணர முடியும் . சமாந்தர உலகம் பற்றி தெளிவுற எனது 12B திரைப்படம் பற்றிய பதிவு .

இவ்வளவு குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி இதை ,இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது ?எப்படி நம்புவது ? என்பது பற்றி பார்ப்போம் .

சிலருக்கு ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என மனம் உறுத்தும்.அவரது நெருங்கிய உறவுகளுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்ப்படலாம் . ஆனால் இது டெலிபதியோடு சம்மந்தப்பட்டது அல்ல . இவைகள் பற்றியும் ஆராய்வோம் ..தொடரும் ...

கொஞ்சம் நகைச்சுவைக்கு ..சிந்திக்கவும் ... 

No comments:

Post a Comment